SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மசூத் அசார் எங்கே இருக்கிறார்? பிபிசியிடம் பாகிஸ்தான் ராணுவம் கூறியது என்ன?

52 நிமிடங்களுக்கு முன்னர்

மசூத் அசார் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் உள்ளாரா என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்பிடம் பிபிசி கேட்டது. அதற்கு அவர், மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக கருதவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், பிபிசிக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஷெரிப் சௌத்ரி கூறியது மாறுபட்டுள்ளது.

”இந்த நபர் பாகிஸ்தான் அரசு காவலில் உள்ளார். இது தெரிந்த உண்மை என்று நினைக்கிறேன். அவர்கள் குற்றம்சாட்டும் இந்த நபர் காவலில் இருப்பதை ஊடகங்கள், சர்வதேச ஊடகங்கள், அறிந்திருப்பதாகவே நினைக்கிறேன், நீண்ட காலத்திற்கு முன்பே மக்களுக்கு நன்றாகத் தெரியும்.” என ஷெரிப் சௌத்ரி கூறியுள்ளார்.

மேலும் விவரங்கள் காணொளியில்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU