SOURCE :- INDIAN EXPRESS
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அம்மாவட்ட ஆட்சியர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மூர்த்திக்கு இடையில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இருக்கையை உதயநிதி மகன் இன்பநிதிக்கு கொடுத்தது யார் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் நேற்று முன்தினம் அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்பட்ட நிலையில், இந்த போட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் அவரது மகன் இன்ப நிதி கலந்துகொண்டார். இந்த போட்டி நடைபெறும்போது, உதயநிதி அருகில் இன்பநிதி, அவருக்கு அருகில், அமைச்சர் மூர்த்தி அமர்ந்திருந்தனர்.
உயதிநிதிக்கு வலதுபுறம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அமர்ந்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில், அமைச்சர் மூர்த்தியும், மதுரை மாவட்ட ஆட்சியரும் நின்றுகொண்டு இருந்த நிலையில், உதயநிதி மற்றும் அவரது மகன் இன்ப நிதி இருக்கையில் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இன்பநிதிக்காக ஆட்சியர் நின்றுகொண்டு இருந்தார் என்று பேசப்பட்ட நிலையில், அமைச்சர் நின்றுகொண்டிருந்ததால், தானும் நின்றேன் என்றும், இது குறித்து வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி மேடையில், இன்பநிதி அமர்ந்திருந்தத குறித்து கேள்வி எழுப்பியுள்ள, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, உதயநிதிக்கும், அமைச்சருக்கும் இடையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் இன்பநிதி அமர்ந்திருந்தார். அந்த இருக்கையை விட்டுக்கொடுத்ததே மாபெரும தவறு. ஆட்சியரின் இருக்கையில் இன்பநிதி அமர்ந்துள்ளார். ஆட்சியர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார்.
தனது பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையை விட்டுக்கொடுத்துள்ளார். இப்படி இருக்கும்போது அவர் மீது எப்படி மரியாதை, நம்பிக்கை வரும்? உங்கள் இருக்கையை கூட உங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாவில்லை. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க? அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அரசியல்வாதிகளை பற்றி நான் பேசவில்லை. அதிகாரிகள், தங்களது தன்மானத்தை விட்டுக்கொடுக்க கூடாது. மதுரையில் நடந்நது மாபெரும் தவறு. தான் தவறு செய்யவில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது அதைவிட பெரிய தவறு.
மாவட்ட ஆட்சியருக்கு எனது அன்பான வேண்டுகோள். நீங்கள் இத்தனை மக்களின் முகமாக இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் அன்றைக்கு நடந்துகொண்ட விதம் ஏற்புடையது அல்ல. அமைச்சர் மூர்த்தியே சொல்லியிருந்தாலும், உங்கள் இருக்கையை விட்டுக்கொடுங்கள் என்று நீங்கள் அவரிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS