SOURCE :- INDIAN EXPRESS
சீரான மின் விநியோகத்திற்காக திருச்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளை ஜனவரி 18 சனிக்கிழமை அன்று மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருச்சி மின் தடை பகுதிகள்
திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி .ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, Birds ரோடு, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி.
உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்களம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்காஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர் ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், பந்தாளபேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், சோழமாநகர், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., மலைக்கோவில், பிரகாஷ் நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடி சாலை, குண்டூர், கிளியூர், பர்மாகாலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகள்.
மேலும், எடமலைப்பட்டிப்புதூர் T.S.P.CAMP, கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS