SOURCE :- BBC NEWS

‘முஸ்லிம்னா கல்மா படி’ – பஹல்காமில் கண்முன்னே கணவனை இழந்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்
21 நிமிடங்களுக்கு முன்னர்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி ஐஷான்யா திவேதி தாக்குதல் தொடர்பாக மனம் திறந்து பேசுகிறார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில், உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவேதியும் ஒருவர்.
இந்த தாக்குதல் நடந்தபோது, சுபமின் மனைவி ஐஷான்யா திவேதியாவும் அவருடன் இருந்தார். பிபிசி உடனான உரையாடலில், அன்று என்ன நடந்தது என்பதை ஐஷான்யா விரிவாக பேசுகிறார்.
“ஒருவரின் கண் எதிரிலேயே வாழ்க்கை முடிந்துபோவதை பார்க்கக்கூடாது. காஷ்மீர் எங்கள் வாழ்க்கையை இப்படி புரட்டிப்போடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
370 இனி இல்லை… ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பாக உள்ளது… மக்கள் அங்கு சுற்றுலாவுக்கு செல்லலாம் என்று அரசு சொன்னதை நம்பி நாங்கள் சுற்றிப்பார்க்கச் சென்றோம். அவர்கள் என் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்திவிட்டு உடனே சென்றுவிட்டார்கள்”, என்று ஐஷான்யா பிபிசியிடம் கூறினார் .
தொடர்ந்து பேசிய அவர், “நான் சிலருடைய மனைவிகளையும் பார்த்துப் பேசினேன். ‘எங்களையும் கொன்றுவிடுங்கள்’ என்று அவர்கள் சொன்னபோது, உங்களைக் கொல்லமாட்டோம். கணவனைக் கொன்றது பற்றி உங்கள் அரசாங்கத்திடம் சென்று சொல்லுங்கள் என்று சொன்னதாக தெரிந்தது.
நமது அரசாங்கங்கள் அங்கு எங்களை அனாதையாக விட்டுவிட்டன. ராணுவமும் கைவிட்டது. என்னுடைய காதலை, கணவனை, என்னுடைய வாழ்க்கை முடிந்துபோவதை என்னுடைய கண்களால் பார்த்தேன். இந்த நான்கு நாட்களில் நான் யாரை தொடர்பு கொள்வது?”, என்று அவர் மிகுந்த வருத்தத்துடன் பேசினார்.
மேலும் விவரங்கள் காணொளியில்…
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU