SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தையில் ஈகோ” – டிரம்ப் என்ன சொன்னார்?
புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்
ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தையில் ‘மிகப்பெரிய ஈகோ சம்பந்தப்பட்டுள்ளது’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் – ரஷ்யா பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியபோது, “ஏதோ நடக்கப் போவதாக நினைக்கிறேன். இதில் மிகப்பெரிய ஈகோ சம்பந்தப்பட்டுள்ளது, நான் கூறுகிறேன். பெரிய ஈகோ சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால், ஏதோ நடக்கப் போவதாக நினைக்கிறேன். அது நடக்கவில்லை என்றால், பின்வாங்கி விடுவேன். அவர்கள் இதைத் தொடர வேண்டியிருக்கும்.
மீண்டும் இது ஒரு ஐரோப்பியச் சூழ்நிலையாக உள்ளது. இது ஒரு ஐரோப்பியச் சூழ்நிலையாகத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், முந்தைய நிர்வாகம் நாம் ஈடுபட வேண்டும் என மிக உறுதியாக நினைத்ததால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட அதிகமாக நாம் பண விஷயத்திலும் ஈடுபட்டோம்.
புதின் இதை முடிக்க வேண்டும் என நினைப்பதாக நம்புகிறேன். புதின் போரை முடிக்க வேண்டும் என நினைக்கவில்லை என நான் கருதியிருந்தால், நான் அதைப் பற்றி பேசக்கூட மாட்டேன்.” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU