SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராணுவ நடவடிக்கையை டெஸ்ட் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்ட அதிகாரி

39 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய ராணுவத்தின் சார்பாக இன்று (மே 12) பிற்பகல் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், ”நமது விமானநிலைகள் மற்றும் தளவாடங்களை குறிவைப்பது மிகவும் கடினமானது.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, அது 1970களாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று கிரிக்கெட் பற்றியும் நாம் பேசவேண்டும். ஏனென்றால், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்திருக்கிறார். பல இந்தியர்களைப் போல அவர் எனக்கும் மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.

1970களில் நான் மாணவனாக இருந்தபோது நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது, ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இருவர், அவர்கள் பிரபலமானவர்கள். ஜெஃப் தாம்சன் மற்றும் டென்னிஸ் லில்லி, அவர்கள் இங்கிலாந்தை துவைத்து எடுத்துவிட்டார்கள். அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா ஒரு பழமொழியைக் கூறியது – ‘Ashes to ashes and dust to dust if Thommo don’t get ya, then Lillee surely must.’ நீங்கள் இதை புரிந்துக் கொண்டால், பார்த்தால், நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்பதும் புரிந்துவிடும். நீங்கள் அனைத்து அடுக்குகளையும் தாண்டினாலும் விமான நிலைகள் அல்லது தளவாடம் என எதை நீங்கள் குறிவைத்தாலும், அவற்றை நெருங்கும் முன், அமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு அடுக்கு உங்களை தடுத்துவிடும்” என்றார்.

SOURCE : THE HINDU