SOURCE :- INDIAN EXPRESS
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கடலாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதுகுளத்தூர் உதவிசெயற் பொறியாளர் எம்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கடலாடி 110 kV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 23.01.2025 வியாழன் அன்று நடைபெற இருப்பதால் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, தரைக்குடி, கடுகுசந்தை,மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், T.M.கோட்டை, துத்திநத்தம்
கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, பொதிக்குளம், ஆப்பனூர், ஒருவனேந்தல், தேவர்குறிச்சி, புனவாசல், சவேரியார் பட்டிணம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS