SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வீடுகளுக்கு பின்னால் பதுங்கு குழிகள் – பாதுகாப்பை தேடும் எல்லை கிராம மக்கள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தற்போது அமைதி நிலவினாலும், பஞ்சாப் மாநிலத்தில் எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் வீடுகளில் பதுங்குக் குழிகளை அமைத்து வருகின்றனர். ஃபெரோஸ்பூரில் வசிக்கும் பல்கார்சிங், தனது பேரக்குழந்தைகளுடன் பாதுகாப்பாக வசிக்க பதுங்குக்குழிகளை அமைப்பதாகக் கூறுகிறார். முதன்முறையாக பாகிஸ்தானின் டிரோன்களை வானத்தில் பார்த்த போது மக்கள் பதறிவிட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
இதே போன்று சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போரின் போது பயன்படுத்தப்பட்ட பதுங்குக்குழிகளை மக்கள் தற்போது மீண்டும் திறந்துள்ளனர். டிரோன்களும் ஏவுகணைகளும் வீசப்பட்டதால், பதுங்குக்குழியை திறப்பதில் நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம என மல்கித் சிங் கூறுகிறார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தி ஆறு மாவட்டங்கள் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மே 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களில் இந்தியா தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு, பாகிஸ்தானும் இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பல நாட்கள் தொடர்ந்தது, அதன் பிறகு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU