SOURCE :- INDIAN EXPRESS
வீட்டில் இருக்கும் அரிசி, இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியில் ரிப்பன் பக்கோடா ரெசிபி செய்வது பற்றி பார்ப்போம்.
இட்லி அரிசி – 1 கிலோ
பொட்டுக் கடலை – 200 கிராம்
பூண்டு
சோம்பு
வரமிளகாய் தூள்
கருப்பு எள்
உப்பு
செய்முறை
இட்லி அரிசியை அலசி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து மிக்ஸி ஜார் எடுத்து அதில் பொட்டுக் கடலை சேர்த்து அரைக்கவும். பொட்டுக் கடலை மாவு ரெடி. அடுத்து அதே மிக்ஸியில் 30-40 பூண்டு போட்டு, கொஞ்சம் சோம்பு , தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இதை பொட்டுக் கடலை மாவு உடன் சேர்க்கவும். அதன் பின் வரமிளகாய் தூள், கருப்பு எள், தேவையான அளவு உப்பு, கட்டி பெருங்காயம் சேர்த்து அரைத்து வைத்த இட்லி மாவையும் சேர்த்து விடவும். நன்கு கலக்கவும். கெட்டியாக வரும்.
மீதமுள்ள பொட்டுக் கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும். அதன் பின் சமையல் எண்ணெய் காய்ச்சி ஊற்றி பிசையவும்.
அடுத்தாக முறுக்கு பிடி எடுத்து அதில் ரிப்பன் பக்கோடா செய்வது எடுத்து மாவு போட்ட பின் சூடான எண்ணெய்யில் பிழிந்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS