SOURCE :- INDIAN EXPRESS
2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஜெயலலிதா தலைமையிலான 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, இவர் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். தற்போது வைத்திலிங்கம் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2011 முதல் 2016 ம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்தபோது, குடியிருப்புகள் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை உள்ளே வந்தது. வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை தனியே வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வைத்திலிங்கத்தின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தீவிரவாக சோதனை மேற்கொண்டது. மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், பண மோசடிதடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகள் சென்னை மண்டல அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனை அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
SOURCE : TAMIL INDIAN EXPRESS