SOURCE :- INDIAN EXPRESS
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை பெண்கள் அவிழ்ப்பது வரவேற்கத்தக்கது என்று இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக ஊரான கத்தப்பட்டு கிராமத்தில் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம் அருகேயுள்ள கத்தப்பட்டு கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், தனது சொந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
தனது சொந்த ஜல்லிக்கட்டு காளைகளுடன் பொங்கல் வைத்து, அந்த காளைகளுக்கு உணவளித்து, அப்பகுதி மக்களுடன் இணைந்து மகிழ்ந்தார். விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி அணிவித்து, குடும்பத்துடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டமான், “உலக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்,
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை பெண்கள் அவிழ்ப்பது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS