SOURCE :- BBC NEWS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ”பயங்கரவாத இலக்குகளை” குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.
இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
கடந்த சில தசாப்தங்களாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
1947 பிறகு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இரண்டு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்த நிகழ்வுகள் இங்கே எளிய வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன.




1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியன்று, ஆபரேஷன் கெங்கிஸ் கான் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.
ஆனால் 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்த போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது.



கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று இரவு மும்பையில் ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல், யூத கலாசார மையம் ஆகியவற்றில் நடந்த தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள லக்ஷர் இ தொய்பா இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.




சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் மே 10ஆம் தேதி மாலையில் சண்டை நிறுத்த அறிவிப்புடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் அன்றிரவே காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக இந்தியா, பாகிஸ்தானை குற்றம் சாட்டியது.
அதற்கு பிறகு எந்த இரு நாடுகளிலும் எவ்வித தாக்குதல்களும் நடைபெறவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU