SOURCE :- BBC NEWS

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

ஐஎன்எஸ் குர்சுரா தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் .

இது 2002ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.

1969ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘குர்சுரா’, 31 ஆண்டுகள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி 2001இல் ஓய்வு பெற்றது.

குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலுக்கு 1971 பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வரலாறு உள்ளது.

1971 போரில் ‘குர்சுரா’ என்ன பங்கு வகித்தது? அரபிக் கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட குர்சுரா, விசாகப்பட்டினம் கடற்கரையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகமாக மாறியது எப்படி?

கப்பலின் சிறப்பம்சங்கள்

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

ஐ.என்.எஸ். குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலின் உதவி கண்காணிப்பாளராக தற்போது பணியாற்றி வருகிறார் எம்.வி.ஆர். மூர்த்தி.

குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலின் அம்சங்கள் மற்றும் அது எவ்வாறு அருங்காட்சியகமாக மாறியது என்பதை அவர் பிபிசிக்கு விளக்கினார்.

“இந்தியா இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. 22 டார்பிடோக்களை (கடற்படை ஆயுதமாக பயன்படுத்தப்படுவது) சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இது 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றது.

குருசுரா நீர்மூழ்கிக் கப்பல் குறித்து எம்.வி.ஆர். மூர்த்தி பிபிசிக்கு அளித்த விவரங்களின் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • கப்பலின் நீளம் 91.3 மீட்டர், உயரம் 11.92 மீட்டர்.
  • கடல் மேற்பரப்பில் மணிக்கு 15.5 நாட்ஸ் (சுமார் 28.7 கிமீ) வேகத்திலும், நீருக்கடியில் மணிக்கு 9 நாட்ஸ் (சுமார் 16.7 கிமீ) வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது.
  • கடல் மேற்பரப்பில் அதன் எடை 1,945 டன், நீருக்குள் 2,469 டன்.
  • இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏழு பெட்டிகள் உள்ளன.
  • முதல் பெட்டியில் டார்பிடோக்கள் உள்ளன. மொத்தம் 22 டார்பிடோக்களை அதில் வைக்க முடியும்.
  • இரண்டாவது பெட்டியில் ஆறு கேபின்களும் ஒரு டைனிங் ஹாலும் உள்ளன.
  • தேவைப்படும் போது இந்த டைனிங் ஹாலை அறுவை சிகிச்சை அரங்கமாக மாற்றலாம்.
ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்
  • மூன்றாவது பெட்டிதான் நீர்மூழ்கிக் கப்பலின் உயிர்நாடி.
  • நீர்மூழ்கிக் கப்பலின் ஒவ்வொரு சிறிய அசைவும் இங்கே பதிவு செய்யப்படுகிறது.
  • நான்காவது பெட்டியில் ஒரு பெரிஸ்கோப் (வெளியே பார்க்க உதவும் ஒளியியல் கருவி) மற்றும் ஒரு தகவல் தொடர்பு அமைப்பும் உள்ளது.
  • ஐந்தாவது பெட்டியில் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள எந்த இயந்திரத்தையும் இயக்கக்கூடிய ஒரு அமைப்பு உள்ளது.
  • ஆறாவது பெட்டியில் நீர்மூழ்கிக் கப்பலின் வேகத்தையும் திசையையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு உள்ளது.
  • ஏழாவது பெட்டியில் 25 பேர் தூங்கும் வசதி இருக்கும். டார்பிடோக்களையும் அங்கிருந்து பயன்படுத்த முடியும்.

‘1971 பாகிஸ்தான் போரில் குர்சுரா’

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

1971ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் ‘குர்சுரா’ முக்கிய பங்கு வகித்தது. அந்தப் போரின் போது அது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டது.

எதிரி கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதும், பாகிஸ்தான் கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதும் இந்த நீர்மூழ்கிக் கப்பலின் முக்கிய நோக்கமாக இருந்தது.

‘குர்சுரா’ இந்திய கடற்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளையும் செய்தது.

ஐஎன்எஸ் குர்சுரா என்பது டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்.

இந்த கப்பலால் எதிரிகளின் கடல் பகுதிக்குள் அமைதியாக ஊடுருவி, நீருக்கடியில் இருந்தபடியே நீண்ட நேரம் செயல்பட இயலும்.

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

போரின் போது பாகிஸ்தான் கப்பல்களைக் கண்காணிப்பதிலும், மூலோபாயத் தகவல்களைச் சேகரிப்பதிலும் இந்தக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.

நீர்மூழ்கிக் கப்பல் நேரடித் தாக்குதல்களை மேற்கொள்கிறதா அல்லது எதிரி கப்பல்களுடன் மோதுகிறதா போன்ற அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்று மூர்த்தி குறிப்பிடுகிறார்.

“நமக்கு மூன்று பக்கங்களிலும் கடல் உள்ளது, எனவே நீர்மூழ்கிக் கப்பல்கள் வருடத்தில் 365 நாட்களும் பணியில் இருக்கும். குர்சுரா பெரும்பாலும் அரபிக் கடலில் கண்காணிப்புப் பணிகளைச் செய்தது.”

“ஆனால் அது எப்போது போகும், எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. இது 440 டன் டீசல், உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது. அவை இரண்டு மாதங்களுக்கு போதுமானது” என்று மூர்த்தி விளக்கினார்.

அது எப்படி ஒரு அருங்காட்சியகமாக மாறியது?

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

பிப்ரவரி 2001இல் ‘ஐஎன்எஸ் குர்சுரா’ ஓய்வு பெற்ற பிறகு, அதை ஒரு அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருந்ததாக மூர்த்தி கூறினார்.

ஐஎன்எஸ் குர்சுரா போன்ற ஃபாக்ஸ்ட்ராட் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் டீசல் என்ஜின் மூலம் இயங்கும். குர்சுரா ஓய்வு பெறும் நேரத்தில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கன் மீது இந்திய பாதுகாப்புத் துறை தனது கவனத்தை திருப்பத் தொடங்கியது.

நீர்மூழ்கிக் கப்பலின் அருகே பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படும் அபாயம் உள்ளது.

இந்தச் சூழலில், அப்போதைய கிழக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா, ஐஎன்எஸ் குர்சுராவை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அமைக்க நினைத்தார்.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இளைஞர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், இந்திய கடற்படையின் செயல்திறன் மற்றும் மகத்துவத்தை அவர்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கப்படும் என்றும் நம்பப்பட்டது.

“ஓய்வு பெற்ற பிறகு, குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரும் பணிகள் தொடங்கின. ஆனால் அது எளிதான விஷயமாக இல்லை. முழுமையாக 18 மாதங்கள் பிடித்தது. அந்த காலகட்டத்தில் ரூ.6 கோடி செலவானது,” என்று உதவி கண்காணிப்பாளர் மூர்த்தி கூறினார்.

நீர்மூழ்கிக் கப்பலை கரைக்குக் கொண்டுவர என்ன செய்தனர்?

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

இரும்புக் கயிறுகளின் உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பலை கரையை நோக்கி இழுக்க இரும்பு பந்துகள் வெல்டு (Weld) செய்யப்பட்டன.

கரையை அடைந்த பிறகு, நீர்மூழ்கிக் கப்பல் கவிழ்ந்து விடாமல் இருக்க, வலுவான உலோகத் தொகுதிகளால் நீர்மூழ்கிக் கப்பல் வெல்டு செய்யப்பட்டது.

நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்த 90 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் மற்றும் 4 மீட்டர் ஆழம் கொண்ட அடித்தளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இழுவை இயந்திரங்களின் உதவியுடன், நீர்மூழ்கிக் கப்பல் மணலில் மோதும் வரை கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

அடுத்து, மணலில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை, ஏற்கனவே கட்டப்பட்ட அடித்தளத்தின் மீது கொண்டு வர வேண்டும். இதற்காக, ஒரு ஹைட்ராலிக் வின்ச் (ஒரு பொருளை இழுக்க அல்லது தூக்க பயன்படுவது) அமைக்கப்பட்டு, அதில் வலுவான இரும்பு கேபிள்கள் கட்டப்பட்டு, நீர்மூழ்கிக் கப்பல் கரையை நோக்கி இழுக்கும் பணி தொடங்கியது.

ஆனால் நீர்மூழ்கிக் கப்பலின் முன்பகுதி மணலில் சிக்கிக்கொண்டது. அதை சற்று மேலே தூக்கி முன்னோக்கி இழுப்பதற்காக உதவி அமைப்புகள் பொருத்தப்பட்டன.

ஆனால் அதே நேரத்தில், மணல் மீண்டும் கப்பலின் இருபுறத்திலும் சூழ்ந்தது. அதைச் சரிசெய்ய மண் அள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், மிகுந்த சிரமத்துடன், ஒரு ஹைட்ராலிக் வின்ச் மற்றும் இரும்பு கம்பிகளின் உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பலை அடித்தளத்திற்கு அருகில் கொண்டு வர முடிந்தது.

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

ஹைட்ராலிக் ஜேக் (கனமான பொருட்களைத் தூக்க ஹைட்ராலிக் அழுத்தத்தைப் பயன்படுத்தும் ஒரு இயந்திர சாதனம்) உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பலை அடித்தளத்தில் நிலைநிறுத்த முடிந்தது.

சுனாமி மற்றும் பூகம்பங்கள் ஏற்பட்டால் நீர்மூழ்கிக் கப்பல் நகர்வதைத் தடுக்க கனமான இரும்புக் கம்பிகள் நீர்மூழ்கிக் கப்பலில் வெல்டு செய்யப்பட்டன.

இருப்பினும், இந்தப் பணிகளின் போது, நீர்மூழ்கிக் கப்பலின் சில பகுதிகள் சேதமடைந்தன. பின்னர், அவை பழுதுபார்க்கப்பட்டன.

கடற்கரையில் இருப்பதால் துருப்பிடிப்பதைத் தடுக்க அவர்கள் மூன்று முறை துரு தடுப்பு பூச்சுகளை பூசினர்.

இறுதியாக, குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல் 2002-ஆம் தேதி ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

கடலில் நீர்மூழ்கிக் கப்பல், நிலத்தில் அருங்காட்சியகம்

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

‘நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம்’ 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு ரேடார் அறை, சோனார் அறை, கட்டுப்பாட்டு அறை, டர்பிடோக்கள் மற்றும் பிற ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

“இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்த பிறகு, பல கஷ்டங்களைத் தாண்டி நாட்டிற்கு சேவை செய்த பாதுகாப்புப் பணியாளர்களின் மகத்துவத்தை உணர்ந்தேன். இவ்வாறு நெருக்கடியான இடங்களில் எப்படி சாப்பிட்டு தூங்கியிருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று சத்தீஸ்கரைச் சேர்ந்த நிஷ்டா சாஹு பிபிசியிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU