SOURCE :- INDIAN EXPRESS
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 2 புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.
அந்த வகையில், மதிய வேளையில் மனசெல்லாம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை பெரிய நடிகர் பட்டாளம் இணைந்து நடிக்கும் கெட்டி மேளம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாக மாலை வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி, ஜனவரி 20ஆம் தேதி முதல் மாரி சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் வள்ளியின் வேலன் சீரியல் 6.30 மணிக்கும், வீரா சீரியல் 7:00 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நினைத்தாலே இனிக்கும் சீரியல் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 10:30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனசெல்லாம் சீரியலில், இரண்டு அண்ணன்களும் தங்கைகளும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் படித்த பையனும் அதே போல் படித்த பெண்ணும் காதலிக்கின்றனர். இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரியாத நிலையில் படிக்காத பெண்ணும் படிச்ச முறைப்பையன் மீது காதலுடன் இருக்கிறாள்.
இந்த சமயத்தில் படிச்ச ரெண்டு பேருக்கும் படிக்காத ரெண்டு பேருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவெடுக்கின்றனர், கல்யாண ஏற்பாடுகளும் நடக்க படிக்காத பெண் மாமா மீது இருக்கும் காதலை சொல்ல கடைசி நொடியில் ஜோடி மாறி திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. இப்படியான நிலையில் அந்த இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பது தான் கதை. இதில் தீபக் குமார் நாயகனாக நடிக்க, ஜெய் பாலா, வெண்பா. பரமேஸ்வரி ரெட்டி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
அதே போல் சாமானிய குடும்பத்தை சேர்த்தவர்கள் சிவராமன் தம்பதியினர். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என வாழ்ந்து வருகின்றனர். எல்லா ஏழை குடும்பத்திற்கும் இருப்பது போல் இவர்களுக்கும் பெரிய வீடு கட்டி குடியேற வேண்டும். பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கனவு நனவாகுமா? இவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது தான் கெட்டிமேளம் சீரியலின் கதைக்களம்.
இதில் பொன்வண்ணன், ப்ரவீனா, சிபு சூரியன், சாயா சிங், விராட், சௌந்தர்யா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு புத்தம் புதிய சீரியல்களின் ப்ரமோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS