SOURCE :- INDIAN EXPRESS

பொங்கலையொட்டி எல்லோர் வீடுகளிலும் சமைக்கப்படும் சாம்பாரை எப்படி தயாரிப்பது என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். முதலில் இதற்கு தேவையான பொருட்களை காணலாம்.

Advertisment

தேவையான காய்கறிகள்:

முருங்கைக்காய்,
தட்டைக்காய்,
காராமணி, 
புடலைங்காய்,
நாட்டு அவரைக்காய்,
பீன்ஸ்,
வாழைக்காய்,
சிவப்பு பூசணிக்காய்,
வெள்ளை பூசணிக்காய்,
சேனைக்கிழங்கு,
சர்க்கரை வள்ளி கிழங்கு,
கேரட்,
நாட்டுத் தக்காளி,
கருனைக்கிழங்கு,
கத்திரிக்காய்,
நூக்கோல்,
உருளைக் கிழங்கு,
பீட்ரூட்,
கோவைக்காய்
வெண்டைக்காய்,
பட்டர் பீன்ஸ்,

தேவையான மசாலா பொருட்கள்:

Advertisment

Advertisement

துவரம் பருப்பு ஒரு கப்,
கறிவேப்பிலை தேவையான அளவு,
சிவப்பு மிளகாய் 10
முழு மல்லி 8 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் 1,
மஞ்சள் தூள் தேவையான அளவு,
துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்,
பச்சரிசி 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் 2 டீஸ்பூன்,
சோம்பு 4 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்,
கடுகு ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் 15

செய்முறை:

இந்தக் காய்கறிகள் அனைத்தையும் நம் வீட்டிற்கு தேவையான அளவு எடுத்து, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். பின்னர், ஒரு பெரிய குக்கரில் காய்கறிகளை போட வேண்டும். இத்துடன் கழுவி வைத்த துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். இதையடுத்து, காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

இப்போது அடுப்பில் மண் பாத்திரம் வைத்து அதில் காய்ந்த மிளகாய்கள், சீரகம், மல்லி, சோம்பு, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும். வறுத்த பின்னர் இந்த பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து, அரைத்து எடுத்த மசாலாவுடன் சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். இப்போது ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதில், உளுத்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இவற்றை தாளித்த பின்னர், வேக வைத்த காய்கறிகளை இந்த பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், மிக்ஸியில் அரைத்த மசாலாவையும் இதில் கலக்க வேண்டும்.

இதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். இந்த சாம்பார் கொதித்ததும் அதில் தேங்காய் பூ சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொங்கல் சாம்பார் தயாராகி விடும்.

முக்கியமாக, இதனை சாமிக்கு படைத்து விட்டு தான் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அதற்கு முன்பாக உப்பு சேர்க்கக் கூடாது

SOURCE : TAMIL INDIAN EXPRESS