SOURCE :- INDIAN EXPRESS
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள அக்கட்சி, தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் மட்டுமெ என்று அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது தனது 69-வது படத்தில் நடித்து வரும் விஜய், இந்த படம் தனது கடைசி படம் என்றும், இதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் கட்சி தொடங்கிய விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடத்தினார். ஏராளமான இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வரும் விஜய், தனது கட்சி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்கள், மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கினார்.
இதனிடையே, அடுத்து நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தல் தான் தங்களது இலக்கு என்றும், இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் போட்டியிடவில்லை என்றும் கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் என ஐந்து வகையாக பதவிகள் குறத்து அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு 7 வகையான நெறிமுறைகளையும் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி பதவிக்கு போட்டியிடுபவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும் இல்லையெனில் ஏற்கப்படாது, விண்ணப்ப படிவத்துடன் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் கட்டாயமாக இணைக்க வேண்டும், கழக மாவட்டம், போட்டியிடும் பதவி தெளிவாக குறிப்பிட வேண்டும். தேர்வு தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS