SOURCE :- INDIAN EXPRESS
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மொத்தம் 9 சுற்றுடன் நிறைவு பெற்றது. இதில் மொத்தம் 1000 காளைகள் அவிழ்க்கப்பட்டன. சிறந்த காளைக்கான முதல் பரிசு சேலம் பாகுபலி காளை பெற்றது. இந்த காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பாக டிராக்டர் பரிசு நாட்டு பசு மற்றும் கன்று வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு வக்கீல் பார்த்தசாரதி மோட்டார் பைக், விவசாய ரோட்டைவிட்டர் கருவி வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக, புதுக்கோட்டை கண்ணன் எலெக்ட்ரிக் பைக் பரிசு வழங்கப்பட்டது. நான்காம் பரிசு இலங்கை செந்தில் தொண்டைமான் மோட்டார் பைக் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரரருக்கான முதல் பரிசு 20 காளைகளை அடக்கிய, பூவந்தி அபி சித்தர் என்பவருக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் சார்பாக கார் பரிசு மற்றும் நாட்டு பசு மற்றும் கன்று பரிசு வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி 2-வது பரிசு பெற்ற, பொதும்பு .ஸ்ரீதர் என்பவருக்கு, ஷேர் ஆட்டோ வாகனம் பரிசு, 10 காளைகளை அடக்கி 3-வது பரிசு பெற்ற, மடப்புரம் விக்னேஷ் என்பவருக்கு, ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் பரிசும் வழங்கப்பட்டது.
9- காளைகளை அடக்கி, 4-வது பரிசு பெற்ற ஏனாதி அஜய் என்பவருக்கு, டி.வி.எஸ். எக்ஸ் எல் பைக் பரிசு வழங்ககப்பட்டது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS