SOURCE :- BBC NEWS
லாஸ் ஏஞ்சலிஸ்: கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயின் கோரக் காட்சிகள்
22 நிமிடங்களுக்கு முன்னர்
லாஸ் ஏஞ்சலிஸில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் ஹாலிவுட் பிரபலங்கள் முதல் சராசரி மக்கள் வரை தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் காட்டுத்தீக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சுமார் 29 ஆயிரம் ஏக்கர் இந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸின் பசிஃபிக் பேலிசேட்ஸ் பகுதியின் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதலில் காட்டுத்தீ ஏற்பட்டது.
சில ஏக்கரில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ தற்போது 17, 200 ஏக்கருக்கும் மேல் பரவியுள்ளது. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அழிவாக பேலிசேட்ஸ் காட்டுத்தீயை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU