SOURCE :- INDIAN EXPRESS
இந்தக் கற்பனை சரி என்று தோன்றவில்லை, எந்தச் சலுகைகளும், நிறுவனத்தின் பங்குகளும் அல்லது திகைக்க வைக்கும் ஆறு இலக்க சம்பளங்களும் இதை (தொழிலாளர் நலன்) சரிக் காட்டுவதாகத் தெரியவில்லை. தொழில்துறை சகோதரர்கள் கூற்றை நம்புவதாக இருந்தால், உற்பத்தித்திறனின் எதிர்காலம் வேலை-வாழ்க்கை சமநிலையில் இல்லை, ஆனால் வேலை-வேலை என்ற மாறுதலில் மட்டுமே உள்ளது என்பதாகும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Express view on L&T chairman’s remarks: The CEOs who lack of vision, empathy or ideas
2023 ஆம் ஆண்டில் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேர வேலையைப் பரிந்துரைத்த பிறகு, லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அன்ட் டி) தலைவர் எஸ்.என் சுப்பிரமணியன் ஊழியர்களை ஒவ்வொரு வாரமும் 90 மணிநேரம் வேலை செய்யவும், தொழிற்திறனில் சிறந்து விளங்க வாராந்திர விடுப்பு நாட்களைக் கூட கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இடையிடையே, ஓலாவின் பாவிஷ் அகர்வால், பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிர்வாகத் தலைவர் சாந்தனு தேஷ்பாண்டே போன்ற அனைத்து வகையான பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், தனித் திறமைகளை வளர்ப்பது, தேசத்தைக் கட்டியெழுப்புவது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து கடுமையான வேலை விதிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வருடாந்திர நிறுவனக் கூட்டத்தில் சுப்ரமணியன் சொன்னது போல், “உன் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும், மனைவி கணவனை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்?” “அதிக இலக்குகளுக்கு ஈடாக தங்கள் உடல்நலம், உறவுகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய விரும்பாதவர் யார் இருக்க முடியும்?” என்றும் அவர் கூற முடிகிறது. அதிக மன அழுத்தம், குறைந்த வருமானம், குறைவான வாய்ப்புகள் மற்றும் போதிய ஆதரவு அமைப்புகள் இன்மை ஆகியவற்றுடன் போராடும் ஒரு தொழிலாளர் கூட்டத்திற்கு, (நிர்வாகிகளின்) கடினமான நிலைப்பாடும் பச்சாதாபம் காட்டும் விதமும் இதை விடத் தெளிவாக இருக்க முடியாது. எல்லாமே வணிக அளவுதான்.
நிச்சயமாக, மனித வளத் துறையின் உபதேசங்களும், வண்ணமயமான கொண்டாட்டங்களும் மற்றும் வருகையேடு முறைப்படுத்தல், நடைமுறைக்கு ஒவ்வாத இலக்குகளை நிர்ணயித்தல், பெரிதாக வேறு எதற்கும் ஆதரவு அளிக்காத நிலைமை ஆகியவை கடைத் தட்டில் இருக்கும் பணியாளர்களுக்கு இது ஒரு இரகசியமே இல்லை. நடைமுறையில், ஆசிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 49 மணிநேரம் வேலை செய்கிறார்கள், மாறாக வேலைநேரம் வட அமெரிக்காவில் வாரத்திற்கு 37.9 மணி நேரமும் மற்றும் ஐரோப்பாவில் சுமார் 37 மணி நேரமும் மட்டுமே.
ஆனால் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் இருந்து வரும்போது, இது போன்ற அறிக்கைகள் இத்தகைய இலக்குகள் மனிதனை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் கருத்திலே கொள்ளாதது மிகவும் அதிர்ச்சிக் குறியது. நீண்ட நேர உழைப்பு அதிக உற்பத்தியையும் வெற்றியையும் கொடுக்கும் என்ற கருத்தில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. இது பணிபுரிவர்களின் உடல் மற்றும் மன ரீதியான நலன்களையோ அல்லது குடும்பத் தேவைகளையோ மற்றும் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து வேலை செய்யும் நிலையான தன்மையைப் பற்றியோ கவனத்தில் கொள்ள வில்லை. 24/7 வேலைக் கலாச்சாரம் என்பது, தகுந்த வருமானம் காரணமாக பெரும்பான்மையினரின் இல்லங்களில் தேவையான வசதியும் ஆதரவும் பெறும் ஒரு உயர்ந்த நிலையை முன்வைக்கிறது.
22 மணி நேரம் வேலை செய்வதை பிரதமர் கூட உறுதி செய்யும் ஒரு நாட்டில், இந்த போக்கைக் நிராகரிக்கப்பது என்பது கடினமே. பணியாளனின் தேவைகளையும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும் சீரமைக்கவும், “உழைப்பாளி ஒரு பண்டம் அல்ல” என்கிற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முன்னுரையை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதற்கும் ஒரு உள்ளுணர்வுடன் கூடிய திறமை அவசியம். பெரும்பாலான நிர்வாகத் தலைவர்கள் படிக்கத் தவறிய ஒரு முக்கிய அம்சம் இது.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS