SOURCE :- INDIAN EXPRESS
உணவுப் பொருட்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொண்ட சின்ன வெங்காயத்தை அனைவரும் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். ஆனால், பலரும் சின்ன வெங்காயத்தை உரிப்பதற்கு ரொம்பவே சிரமப் படுகிறார்கள். அவர்களுக்காக ஒரு சொட்டு எண்ணெய் கொண்டு சின்ன வெங்காயம் உரிப்பது என்று ஈசி கிச்சன் டிப்ஸ் இங்கே தருகிறோம்.
சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கே, பி2, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலேட், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் குறையும். வெங்காயத்தில் உள்ள வைட்டமின்கள் புற ஊதா கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. வெங்காயத்தை சாப்பிடுவதால் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தின் நெடி சில தலைவலிகளை குறைக்கும்.
சின்ன வெங்காயத்தை சமையலில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிக்கலாம். இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மை சின்ன வெங்காயத்தில் உள்ளது.
சின்ன வெங்காயத்தில் இப்படி இன்னும் பல ஏராளமான
ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் அனைவரும் சமையலில் சின்ன வெங்காயத்தை அனைவரும் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். ஆனால், சின்ன வெங்காயத்தை உரிப்பதுதான் மிகப்பெரிய சிரமம். குட்டி குட்டியாக இருக்கும் சின்ன வெங்காயத்தை தோல் உரிப்பது ரொம்ப சிரமமாக இருக்கு. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து முடிப்பதற்குள் கண்களில் தண்ணீர் ஆறாக கொட்டும்.
அதனால், சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கும்போது கண்களில் தண்ணீர் வராமல் இருக்க, சின்ன வெங்காயத்தை உரிக்கும் கத்தியில் சிறிது எண்ணெய் தடவி விட்டு உரித்தால், நமது கண்களில் தண்ணீர் வராது. அதே நேரத்தில், கத்தியில் எண்ணெய் தடவி இருப்பதால் தோல் உரிக்க்க வெட்டும்போது கொஞ்சம் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் வெட்டுங்கள்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS