SOURCE :- BBC NEWS
‘என் டிஷர்ட்டுக்குப் பின்னால் ‘இந்தியா’ என்று எழுத விரும்பினேன்’ – பிபிசி நிகழ்வில் பேசிய பாராலிம்பிக் வீராங்கனை சிம்ரன்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியாவில் பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து வீராங்கனைகள்: கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பரிந்துரைகளை அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை உள்ளடக்கிய நடுவர் குழு வழங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாராலிம்பிக் வீராங்கனை சிம்ரன் சர்மா, தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU