SOURCE :- BBC NEWS
தமிழ்நாட்டில ் கடந்த சில ஆண்டுகளாக பொன்னுக்க ு வீங்க ி நோயின ் பரவல ் அதிகரித்த ு வருகிறது. அரச ு தடுப்பூச ி திட்டத்தின ் கீழ ் பொன்னுக்க ு வீங்க ி சேர்க்கப்படாதத ு இந்த அதிகரிப்புக்கான முக்கியக ் காரணமாகப ் பார்க்கப்படுகிறது.
இதனால ் வரும ் காலங்களிலும ் இந்த நோயின ் பரவல ் அதிகமாக இருக்கலாம ் என்ற ு மூத்த மருத்துவர்களும், துற ை சார்ந்த நிபுணர்களும ் எச்சரிக்கின்றனர்.
அரச ு திட்டத்தில ் புதிய தடுப்பூசிகளைச ் சேர்ப்பத ு குறித்த ு மத்திய அரச ு முடிவ ு செய்ய வேண்டும ் என்ற ு மாநில சுகாதாரத்துற ை கூறுகிறது. இந்த நோய்ப ் பரவலைக ் கண்டறிய, இந்த நோய ை ‘ தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக ‘ மாநில அரச ு அறிவிக்க வேண்டும ் என்ற ு ஆராய்ச்சியாளர்கள ் சிலர ் வலியுறுத்துகின்றனர்.
பொன்னுக்க ு வீங்க ி வெக ு காலமாக சமூகத்தில ் இருந்த ு வரும ் நோயாகும். பொதுவாக குழந்தைகளிடம ் இந்த நோய ் காணப்பட்டாலும ் பெரியவர்களுக்கும ் தீவிர பாதிப்ப ை ஏற்படுத்தக ் கூடும். இந்த நோய ் மலட்டுத ் தன்மையை, குறிப்பாக ஆண்களிடைய ே அதிகம ் ஏற்படுத்த வாய்ப்ப ு உள்ளதால், இதன ் பரவல ை தீவிரமாகக ் கண்காணிக்க வேண்டும ் என்ற ு வலியுறுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில ் கடந்த 2021-2022ஆம ் ஆண்டில ் 61 பேருக்கும ் 2022-2023ஆம ் ஆண்டில ் 129 பேருக்கும ் பொன்னுக்க ு வீங்க ி இருப்பத ு கண்டறியப்பட்டது. ஆனால ் கடந்த ஆண்டு, அதாவத ு 2023-2024இல ் 1, 091 பேருக்க ு தமிழ்நாட்டில ் பொன்னுக்க ு வீங்க ி இருப்பத ு கண்டறியப்பட்டது.
இந்தத ் தரவுகளைக ் குறிப்பிடும ் தமிழ்நாட ு பொத ு சுகாதாரத்துற ை ஆய்விதழில ் வெளிவந்துள்ள கட்டுரை, மேலும ் சில தரவுகளையும ் கூறுகிறது.
” ஒர ு லட்சத்தில ் எத்தன ை பேருக்க ு நோய ் ஏற்படும ் என்ற விகிதம ் 2021இல ் 0.07 ஆக இருந்தது. அந்த விகிதம ் 2024இல ் 1.3 ஆக அதிகரித்துள்ளது. இந்த மூன்ற ு ஆண்டுகளில ் தெரிவிக்கப்பட்ட நோய ் பாதிப்புகளில ் 31 % சென்னையில ் பதிவாகியுள்ளத ு”.
இதனால ் பொன்னுக்க ு வீங்கிய ை ‘ தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக ‘ அறிவிக்க வேண்டுமென்ற ு தமிழ்நாட ு பொத ு சுகாதாரத்துறையைச ் சேர்ந்த ஆய்வாளர்கள ் நர்மதா, அபிநய ா உள்ளிட்டோர ் எழுதிய அந்த ஆய்வுக ் கட்டுர ை வலியுறுத்கிறது.
பொன்னுக்க ு வீங்க ி நோய ் அறிகுறிகள ் என்ன?
ஆங்கிலத்தில ் மம்ஸ ் ( mumps ) என்றழைக்கப்படும ் பொன்னுக்க ு வீங்க ி நோய், பாராமிக்சோவைரஸ ் எனும ் வைரஸ ் குடும்பத்தைச ் சேர்ந்த ஒர ு வைரஸால ் ஏற்படும ் நோயாகும். இத ு காற்றில ் எளிதாகவும ் வேகமாகவும ் பரவக்கூடியது.
காதுகளுக்க ு முன்பாக இருபுறமும ் இருக்கும ் உமிழ்நீர ் சுரப்பியின ் ( parotid gland ) வீக்கம ் இந்த நோயின ் பிரத்யேக அறிகுறி. இந்த நோயால ் பாதிக்கப்பட்டவருக்க ு இடத ு அல்லத ு வலத ு அல்லத ு இருபுறமும ் காதுகளுக்க ு கீழ ே பெரிய வீக்கம ் தென்படும். காதுகளுக்குக ் கீழ ே மிகுந்த வல ி ஏற்படும். மேலும ் காய்ச்சல், உடல ் சோர்வ ு ஏற்படும்.
” ஒருவருக்க ு நோய்த ் தொற்ற ு ஏற்பட்ட ு இரண்ட ு வாரங்கள ் வரைகூட அறிகுறிகள ் தென்படாமல ் இருக்கலாம். அறிகுறிகள ் தென்படுவதற்க ு முன்பாக அவர ் மற்றவருக்க ு அந்த நோயைப ் பரப்பியிருக்க முடியும். எனவ ே குழந்தைகளிடம ் குறிப்பாக பள்ளிக ் குழந்தைகளிடம ் மிக வேகமாக இந்த நோய ் பரவும ்” என்ற ு தொற்றுநோய ் நிபுணரும ் மூத்த மருத்துவருமான சுப்ரமணியன ் சுவாமிநாதன ் கூறுகிறார்.
இதைக ் குணப்படுத்த குறிப்பிட்ட மருந்த ு கிடையாது. இத ு தானாகவ ே சீராகும ் நோய ் என்ற ு மருத்துவர்கள ் கூறுகின்றனர். இந்த நோய ் ஏற்பட்ட காலத்தில ் அதிகமான நீர்ச்சத்துள்ள உணவுகள ை எடுத்துக ் கொள்ளுமாற ு மருத்துவர்கள ் பரிந்துரைக்கின்றனர். இந்த வீக்கத்தால ் ஏற்படும ் வலிக்க ு மட்டும ே மருந்த ு கொடுக்க முடியும்.
” சில குழந்தைகளிடம ் இந்த நோய ் மிக லேசான பாதிப்புகள ை ஏற்படுத்தக ் கூடும். நோய ் வந்ததேகூட தெரியாமல ் இருக்கலாம். ஒவ்வொருவரின ் நோய ் எதிர்ப்ப ு சக்தியையும ் பொருத்த ே இத ு அமையும ்” என்ற ு மாநில பொத ு சுகாதாரத்துற ை முன்னாள ் இயக்குநர ் மருத்துவர ் குழந்தைசாம ி தெரிவிக்கிறார்.
பாதிப்புகள ் என்ன?
இந்த நோய ் நான்க ு அல்லத ு ஐந்த ு நாட்களில ் தானாகவ ே குணமாகக ் கூடியத ு என்றாலும், இத ு தீவிரமாக தாக்கினால், உடலில ் வேற ு சில பாதிப்புகளையும ் ஏற்படுத்தக்கூடும்.
- இதனால ் மூளைக ் காய்ச்சல ் ( Meningitis ) ஏற்பட வாய்ப்புண்டு. இதன ் விளைவாக மூள ை மற்றும ் தண்டுவடத்தைச ் சுற்றியுள்ள சவ்வுகள ் பாதிக்கப்படும்.
- அதோடு, கணைய அழற்ச ி ( Pancreatitis ) ஏற்படும். இதனால ் கணைய செயல்பாடுகள ் நாளடைவில ் பாதிக்கப்படும்.
- ஆர்கைடிஸ ் ( Orchitis ) எனப்படும ் ஆண ் விரைப்பைகளில ் உண்டாகும ் பாதிப்ப ு ஏற்படும். விரைப்பைகளில ் வலியும ் வீக்கமும ் ஏற்படும். இத ே போன்ற ு பெண்களின ் கருப்பைகளையும ் பாதிக்கக்கூடும்.
இந்த நோய ் மலட்டுத ் தன்மையை, குறிப்பாக ஆண்களில், ஏற்படுத்தக ் கூடியத ு என்பதால ் இத ை அரசுத ் திட்டத்தின ் கீழ ் சேர்க்க வேண்டிய அவசியம ் உள்ளதாக முன்னாள ் பொத ு சுகாதாரத்துற ை இயக்குநர ் மருத்துவர ் குழந்தைசாம ி தெரிவித்தார்.
” உயிருக்க ு ஆபத்தான பெரும்பாலான நோய்களுக்க ு எதிரான தடுப்பூசிகள ் அரசுத ் திட்டத்தின ் கீழ ் இலவசமாக அரச ு மருத்துவமனைகளில ் வழங்கப்படுகிறது. அடுத்து, மலட்டுத ் தன்மைய ை உருவாக்க வாய்ப்ப ு இருப்பதால ் இந்த நோய்க்க ு எதிரான தடுப்பூசிய ை வழங்க வேண்டிய அவசியம ் மிகவும ் உள்ளது.
ஆண்கள ் மற்றும ் பெண்களில ் பிறப்புறுப்புகள ் பாதிக்கப்படும். குறிப்பாக ஆண்களின ் பிறப்புறுப்பைப ் பாதிக்கும ் வாய்ப்புகள ் அதிகமாக உள்ளன. இதற்கான குறிப்பிடும்படியான தரவுகள ் இல்ல ை என்றாலும், இத ு மருத்துவ ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல ்”, என்றார ் அவர்.
மேலும்,” தனியார ் மருத்துவமனைக்குச ் சென்ற ு தடுப்பூசிகள ை எடுத்துக ் கொள்ளும ் வாய்ப்ப ு இருப்பவர்களுக்க ு இந்த நோயிலிருந்த ு பாதுகாப்ப ு கிடைக்கிறது. ஆனால், அரச ு மருத்துவமனைகள ை மட்டும ே நம்பியுள்ள மக்கள ் இடையேதான ் இந்த நோய்ப ் பரவல ் அதிகமாக இருக்கும். அவர்களுக்கும ் இந்தப ் பாதுகாப்ப ு தேவ ை” என்றார்.
பொன்னுக்க ு வீங்க ி நோயின ் நோய ் பரவும ் விகிதம ் ( R0- ஆங்கிலத்தில ் ‘ ஆர ் நாட ் ‘ என்ற ு சொல்லப்படும ் விகிதம் ) -10 முதல ் 12 ஆக உள்ளது.
” அதாவத ு நோயால ் பாதிக்கப்பட்ட ஒருவர ் பத்த ு முதல ் 12 பேருக்க ு இந்த நோயைப ் பரப்பக்கூடும். இத ு எந்த வயதினருக்கும ் ஏற்படக ் கூடும். குழந்தைகளுக்க ு எதிர்ப்ப ு சக்த ி குறைவாக இருக்கும ் என்பதால், அவர்களிடம ் பாதிப்ப ு அதிகமாகக ் காணப்படுகிறத ு” என்கிறார ் மருத்துவர ் சுப்ரமணியன ் சுவாமிநாதன்.
தடுப்பூச ி அவசியம ் என வலியுறுத்தும ் நிபுணர்கள ்
தமிழ்நாட ு சுகாதாரத்துறையைச ் சேர்ந்த பெயர ் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகார ி ஒருவர ் கூறுகையில், அரச ு திட்டத்தின ் கீழ ் பொன்னுக்க ு வீங்க ி நோய்க்கான தடுப்பூச ி வழங்கப்படாதத ே இந்த நோய ் பரவலுக்கான முக்கியக ் காரணம ் என்றார்.
” தமிழ்நாட்டில ் தடுப்பூச ி செலுத்த வேண்டிய வயதில ் இருப்பவர்களில ் கிட்டத்தட்ட 85 % பேர ் அரச ு மருத்துவமனைகளில ் இருந்த ு தங்கள ் தடுப்பூசிகளைப ் பெற்றுக ் கொள்கின்றனர். அப்பட ி இருக்கையில், 85 % மக்களுக்க ு இந்தச ் தடுப்பூச ி சென்ற ு சேரவில்லை. சமூகத்தின ் பெரும்பாலான மக்களுக்க ு தடுப்பூச ி கிடைக்காதபோத ு நோய்ப ் பரவல ் அதிகரிக்கும். இன ி வரும ் ஆண்டுகளிலும ் இந்த நோய்ப ் பரவல ் அதிகமாகவ ே இருக்கும ்” என்றார ் பெயர ் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி.
பொன்னுக்க ு வீங்க ி நோய்க்கான தடுப்பூச ி பொதுவாக தட்டம்ம ை மற்றும ் ரூபெல்ல ா நோய்களுக்கான தடுப்பூசிகளுடன ் சேர்த்த ு ஒர ே தடுப்பூசியாக வழங்கப்படும். அரசுத ் திட்டத்தின ் கீழ ் தட்டம்ம ை மற்றும ் ரூபெல்ல ா நோய்களுக்க ு எதிரான தடுப்பூசிகள ் வழங்கப்படுகின்றன. தட்டம்ம ை மற்றும ் பொன்னுக்க ு வீங்க ி நோய்கள ை ஏற்படுத்தும ் வைரஸ்களுக்க ு இடையில ் நிறைய ஒற்றுமைகள ் உள்ளன.
” இரண்டும ் சகோதரர்கள ் போலத்தான். ஒர ு நோயைக ் கட்டுப்படுத்தும்போது, கட்டுப்படுத்தப்படாத மற்றொர ு நோய ் அதிகரிப்பத ு இயல்ப ே” என்றும ் அந்த மூத்த அதிகார ி தெரிவித்தார்.
மாநில பொத ு சுகாதாரத்துற ை இயக்குநர ் டி. செல்வ விநாயகம்,” இந்த நோய்க்கான தடுப்பூசிய ை இலவசமாக வழங்குவதற்கான அவசியம ் உள்ளது. ஆனால், புதிய தடுப்பூசிகள ை அரசுத ் திட்டத்தின ் கீழ ் சேர்ப்பத ு மத்திய அரசின ் கொள்க ை முடிவ ு” என்றார்.
இந்த நோய ் தமிழ்நாட்டில ் மட்டும ் அதிகரிக்கவில்லை, பிற எல்ல ா மாநிலங்களிலும், உலக அளவிலும்கூட பரவல ் இருக்கிறத ு என்றும ் அவர ் தெரிவித்தார்.
இந்த நோய ை தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்க திட்டம ் இருக்கிறத ா என்ற ு கேட்டதற்கு, அனைத்த ு காய்ச்சல்களும ் அரசுக்குத ் தெரிவிக்கப்பட்ட ு வருகின்றன என்ற ு பதிலளித்தார்.
பொன்னுக்க ு வீங்க ி நோய்க்க ு எதிரான தடுப்பூசிய ை ஒன்பத ு மாதங்களில், 15 மாதங்களில், பின்ப ு ஐந்த ு வயதில ் எடுத்துக ் கொள்ள வேண்டும். இந்த வயதில ் எடுத்துக ் கொள்ளத ் தவறிய 18 வயதுக்க ு உட்பட்டவர்கள், 28 நாட்கள ் இடைவெளியில ் இரண்ட ு டோஸ ் தடுப்பூசிய ை எப்போத ு வேண்டுமானாலும ் எடுத்துக ் கொள்ளலாம ் என்ற ு மருத்துவர்கள ் பரிந்துரைக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ ் நியூஸ்ரூம ் வெளியீடு
SOURCE : THE HINDU