SOURCE :- INDIAN EXPRESS

இன்றைய காலக்கட்டத்தில், பலரும் அதிகமான உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் பெண்கள், நடுத்தர வயதினர் என பலரும் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர். உடல் உழைப்பு இல்லாதது, எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உள்ளிட்ட பிரச்னைகளால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடும். தொப்பை விழும்.

Advertisment

அதேபோல் வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லை என்று பலரும் தங்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க, இயற்கையில், பழங்கள், கீரைகள், சூப் ஆகியவை இருப்பது போன்று, உடல் எடையை அதிகரிக்கவும், பல உணவு பொருட்கள் உள்ளது. அந்த வகையிலான ஒரு உணவு தான் உலர் பழங்கள். உலர் திராட்சை, அத்திப்பழம், பேரிச்சம் பழம் என உலர் பழங்கள் உடலுக்கு அதிக நன்மைகள் தரும்.

இந்த பழங்களை ஒன்றாக போட்டு மிக்ஸியில் அரைத்து சாப்பிடலாம். இதற்கு ஸ்மூத்தி என்று சொல்வார்கள். இதை காலையில் சாப்பிட வேண்டும். காலை உணவுக்கு பிறகா அதற்கு முன்பா என்று கேட்கிறார்கள். ஆனால் இதுதான் காலை உணவே. காலை உணவாக நீங்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும். உடல் எடை சரியான அளவில் இருக்கிறது. இதை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மதிய உணவு மற்றும் இரவு உணவு என்ன சாப்பிடுவீர்கள் என்று தெரியாமல் காலையில் இந்த ஸ்மூத்தியை எடுத்தால், உடல் எடை குறையாது. உடல் உடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களின் 3 வேளை உணவுகளையும் சரியாக திட்டமிட்டபிறகு இதனை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். உடல் எடை கூட வேண்டும் என்று நினைத்தால், பாதாம், பிஸ்தா, வால்நட், பேரிச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம், ஆகிவற்றை காலையில் ஊறவைத்து மாலையில் இதனை சாப்பிடலாம்.

Advertisment

Advertisement

சூரியன் இருக்கும்போதே இதனை குடிக்க வேண்டும். இந்த பருப்புகளை ஊறவைத்த தண்ணீரை நீங்கள் குடித்தாலும் குடிக்கலாம் அல்லது விட்டாலும் விடலாம். இது சராசரி உடல் எடைக்கு பொருத்தமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகம் வெயிட் போட வேண்டும் என்றால், அதனுடன், இந்த உலர் பழங்கள் கலவையில் பால் ஊற்றி அதில் ஒரு செவ்வாழை பழத்தை சேர்த்து சாப்பிடலாம். இதை சாப்பிடும்போது மாதத்திற்கு ஒன்றரை கிலோ உடை கூடும் என்று டாக்டர் ஷர்மிளா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS