SOURCE :- BBC NEWS

ரூ.1.28 கோடியில் விண்வெளிச் சுற்றுலா – விஞ்ஞானிகள் எச்சரிக்கும் ஆபத்து என்ன?
புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்
விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது மனித குலத்தின் நன்மைக்காக என்றும், விண்வெளிக்கு சுற்றுலா செல்வது சரியானது அல்ல எனவும் விமர்சனங்கள் எழுகின்றன. இதனால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஆபத்து எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ப்ளூ ஆரிஜின் போன்ற தனியார் நிறுவனங்கள் பூமிக்கு வெளியே போனா எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க தங்கள் வாடிக்கையாளரகளுக்கு சுற்றுலா வாய்ப்பை வழங்கி வருகின்றன.
கேட்டி பெர்ரி, வில்லியம் ஷாட்னர் போன்ற பிரபலங்கள் விண்வெளி சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். ஆனால், இது கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.
விண்வெளி வீரர்கள் மனித குலத்தோட நலனுக்காக இத்தகைய பயணங்களை மேற்கொள்கிறார்கள், ஆனால், இவர்கள் விளம்பரத்துக்காக செல்கிறார்கள் என்பது விமர்சகர்களின் வாதம்.
அதுமட்டுமில்லாமல், இதுபோன்ற பயணங்களால சூழலியலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்த கவலையும் அதிகமாகியிருக்கிறது.
ராக்கெட் என்ஜின் இயக்கப்படுவதால, வெளியேறக் கூடிய வாயுக்கள் மற்றும் துகள்களால ஒசோன் லேயர் பாதிப்படையக்கூடும். புவியின் காலநிலையில் இவை தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.
ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தங்களோட ராக்கெட் என்ஜின் இயக்கப்படுவதால, கார்பன் உமிழ்வுகள் இல்லாம, நீராவிதான் வெளியேற்றப்படுவதாக கூறுகிறது. ஆனா, இதுவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அதாவது, இது பூமியோட வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கான ஸ்ட்ரேடோஸ்பியரில் பாதிப்புகளை ஏற்படுத்தி, ஓசோன் லேயரை பாதிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்தபடியாக இதற்கான செலவு குறித்துப் பார்ப்பதும் அவசியம். ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிச் சுற்றுலா செல்ல விரும்பினால் ஒருவருக்கு தலா 150,000 அமெரிக்க டாலர் டெபாசிட் செய்ய வேண்டும். இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 28 லட்சம் ரூபாய்.
அந்த பணத்தை ஏற்கனவே பூமியில இருக்க பிரச்னைகளை தீர்க்க பயன்படுத்தலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.
விண்வெளி சுற்றுலா என்பது ஒப்பீட்டளவில் சிறிய, புதிய துறையாகவே இருக்கிறது. ஆனால், விண்வெளிச் சுற்றுலா ஆதரவாளர்களை பொருத்தவரை இந்த நிறுவனங்கள் வேகமாக புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதாகவும், விண்வெளிக்கு மனிதர்கள் செல்வதற்கான வாய்ப்பை எளிதாக்குவதாகவும் கூறுகிறார்கள். விண்வெளி குறித்த மக்களின் கனவுகளை நனவாக்க இது உதவுகிறது என்பது அவர்களின் வாதம்.
முழு விவரம் காணொளியில்…
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU