SOURCE :- BBC NEWS

உலக அரசியலில் போப்பின் செல்வாக்கு என்ன? கடந்த கால வரலாறு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். இது உலக மக்கள் தொகையின் சுமார் 17 சதவிகிதம் ஆகும்.

போப்பாண்டவர், கத்தோலிக்க விசுவாசிகளை மட்டுமல்ல, வாடிகன் நகர அரசையும், அதனுடைய நிர்வாக அமைப்பான ‘ஹோலி சீ’-யையும் (திருச்சபையையும்) வழிநடத்துகிறார்.

உலகத் தலைவர்களின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதில் வாடிகனால் எப்போதும் வெற்றி பெற முடியாது.

ஒரு கத்தோலிக்கரான அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் , தனது அரசாங்கத்தின் குடியேற்றம் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த இறையியலைப் பயன்படுத்தியபோது, போப்பாண்டவர் ‘இயேசுவே ஒரு அகதி’ என்று வாதிட்டு கடுமையான வார்த்தைகளைக் கொண்ட கடிதத்தை எழுதினார்.

மற்றொரு கத்தோலிக்கரான அமெரிக்க “எல்லை ஜார்”, டாம் ஹோமன், “போப் கத்தோலிக்க திருச்சபையை சரி செய்வதோடு நின்று கொள்ள வேண்டும்,”என்று அதற்கு பதில் அளித்தார்.

2020 ஆம் ஆண்டில், போப் பிரான்சிஸ் அமேசானைப் பாதுகாக்க வாதிட்டபோது, ​​​​பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அவரை விமர்சித்தார். “போப் அர்ஜென்டினியராக இருக்கலாம், ஆனால் கடவுள் பிரேசிலியன்” என்று போல்சனாரோ பதிலளித்தார்.

திருச்சபையின் சமூக செல்வாக்கு ஐரோப்பாவில் குறைந்து விட்டது. LGBT+ உரிமைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு போன்ற சமூக பிரச்னைகளில் அதன் பழமைவாத நிலைப்பாடு 21ஆம் நூற்றாண்டிற்கு அப்பாற்பட்டது என்று பலர் வாதிடுகின்றனர்.

பெண்களை பாதிரியார்களாக அல்லது டீக்கன்களாகப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற போப் பிரான்சிஸின் முடிவு, இதை எடுத்துக்காட்டுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU