SOURCE :- BBC NEWS

பஹல்காம்  தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், PTI

23 ஏப்ரல் 2025, 16:14 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார்.

“தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாற்றம் இன்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார்.

“அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே1 ம் தேதிக்கு முன்னதாக திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.”

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

SOURCE : THE HINDU