SOURCE :- BBC NEWS

‘என் முன்னோர்களின் ஜென்ம பூமி இந்தியா’ – பாகிஸ்தான் திரும்பும் நபர் உருக்கம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை இந்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பத் தயாராகின்றனர்.

அப்படி நாடு திரும்புபவர்களில் ஒருவர் தான் 75 வயதான துபெல்லா மஸ்கான். ஒன்பது வருடங்கள் கழித்து தன்னுடைய நண்பர்களைக் காண இந்தியா வந்துள்ளார் மஸ்கான். 1984ஆம் ஆண்டிலிருந்து பல முறை இந்தியா வந்து சென்றுள்ளதாகக் கூறுகிறார் மஸ்கான்.

“சொந்தக்காரர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதுபோல, என் நண்பர்கள், என்னை எதிர்பார்த்து கிராமத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்தால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.” என்கிறார் மஸ்கான்.

தனது மூதாதையர் கிராமத்தைப் பார்க்க வந்திருந்த இவர், கனத்த இதயத்துடன் பாகிஸ்தான் திரும்புகிறார்.

“என்னுடைய தாத்தா அப்பா பிறந்த ஜென்மபூமி இது… அவர்களுடைய கல்லறைகளும் இங்குதான் இருக்கிறது.” என்கிறார் மஸ்கான்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU