SOURCE :- BBC NEWS

இந்தியா பாகிஸ்தான் பதற்றம், பஹல்காம் தாக்குதல், ஜம்மு - காஷ்மீர், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்  போராட்டம்

பட மூலாதாரம், AFP via Getty Images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் மோசமடைந்து வருகின்ற நிலையில், உலக நாடுகள் பல இவ்விரண்டு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானும் சில இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியது. இதனை டெல்லி தரப்பு உறுதி செய்யவில்லை என்றாலும் கூட இது இரண்டு பக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதினால், போர் பதற்ற சூழல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பழிக்குப் பழி என்ற ரீதியில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்படும் பட்சத்தில் இரண்டு பக்கமும் மோசமான சேதங்கள் உருவாகும் நிலை ஏற்படும்.

2016 மற்றும் 2019 ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றத்தின் போது அமெரிக்கா மற்றும் சில உலக நாடுகள் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்தன. அதன் பின்னரே இவ்விரு நாடுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பதற்ற சூழல் குறைக்கப்பட்டது.

ஆனால் தற்போது உணர்ச்சிகள் மேலெழும்பியுள்ளன. தேசிய உணர்வு இரண்டு பக்கங்களிலும் புதிய உயரத்தை தொட்டுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக இல்லாத வகையில் இந்த இரு அண்டை நாடுகள் போருக்கு மிக அருகில் உள்ளன.

இந்தியா பாகிஸ்தான் பதற்றம், பஹல்காம் தாக்குதல், ஜம்மு - காஷ்மீர், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

சர்வதேச சமூகம் அமைதி காப்பது ஏன்?

பிரிட்டனில் உள்ள லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அயீஷா சித்திக்கா, “சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது. அது ஆபத்தானது,” என்று கூறுகிறார்.

“இரு நாடுகளுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக சிறிய அளவில் உரசல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. ஆனால் தற்போது கண்காணிக்கவும், நிறுத்துங்கள் என்று கூறவும் யாரும் இன்றி, இவ்விரண்டு நாடுகளும் முதல்முறையாக மோதலில் ஈடுபடுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றால், டெல்லியும் இஸ்லமாபாத்தும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது தொடரும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இவ்விரு நாடுகளும் பதற்றமான சூழலை குறைக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களுக்கு அறிவுறுத்தினாலும், மற்ற அமெரிக்கத் தலைவர்களின் கருத்து இந்த விவகாரத்தில் வேறாக இருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சாத்தியமான போர் சூழல்,”எங்களின் பிரச்னை இல்லை,” என்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.

“எவ்வளவு விரைவாக இயலுமோ, அவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்கு இவர்கள் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், இந்த நாடுகளை நம்மால் கட்டுப்படுத்த இயலாது,” என்று அவர் தெரிவித்தார்.

வான்ஸ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த போது, இந்தியா நிர்வாகிக்கும் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் அதிகரிப்பது ‘வெட்கக்கேடானது’ என்று குறிப்பிட்டார்.

இந்தியா பாகிஸ்தான் பதற்றம், பஹல்காம் தாக்குதல், ஜம்மு - காஷ்மீர், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

தற்போதைய மோதலின் தீவிரம் வேறுபட்டது

இதற்கு முந்தைய காலகட்டங்களில் நிலவிய பதற்றமான சூழல் உடனே தணிக்கப்பட்டது. உதாரணத்திற்கு, 2019-ஆம் ஆண்டு நிலவிய பதற்றமான சூழல், இந்தியாவின் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்குப்’ பிறகு தணிந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் செயல்பட்டு வந்ததாக இந்தியா கூறிய தீவிரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது இந்தியாவின் போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. அதன் விமானி பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளின் தலையீட்டிற்குப் பிறகு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தற்போதைய மோதலின் தீவிரம் வேறுபட்டது. இரண்டு தரப்பிலும் உணர்ச்சி மேலோங்கியுள்ளது.

டிரம்பின் நிர்வாகம் சுங்கவரி, சீனா, யுக்ரேன் – ரஷ்யா விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்ற நிலையில், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலைக் குறைக்க சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது.

தெற்காசியாவில் செயல்பட்டு வரும் மற்றொரு வலிமை பொருந்திய நாடான சீனா, பாகிஸ்தானுடன் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியில் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) ஒரு பகுதியாக சீனா பாகிஸ்தானில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் முதலீடு செய்துள்ளது.

மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னையும் உள்ளது. சமீபத்தில் இவ்விரு நாடுகளும் 2020-ஆம் ஆண்டில் இமாலய பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது.

“இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா விரும்பாத பட்சத்தில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான பி5 நாடுகள் இதில் தலையிட வேண்டும். இது அவர்களின் பொறுப்பும் கூட,” என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் ஷாங்காயை அடிப்படையாக கொண்டு செயல்படும் சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணரான ஷேன் டிங்க்லி.

கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இந்த குற்றச்சாட்டு குறித்து பி5 உறுப்பு நாடுகள் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

SOURCE : THE HINDU