SOURCE :- BBC NEWS

கண்ணைக் கவரும் ஒளிரும் காளான்கள் ஏன், எப்படி உருவாகின்றன தெரியுமா? ஆனைமலைக் காடுகள், ஒளிரும் காளான்கள்,

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 8 நிமிடங்களுக்கு முன்னர்

தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சியின் சில பகுதிகளில் ஒளிரும் காளான்களை மக்கள் பார்த்துள்ளனர்.

பகலில் வெள்ளை நிறத்தில் தோன்றும் அந்த காளான்கள், இரவில், ஈரப்பதமான சூழலில் நியான் பச்சை நிறத்தில் ஒளிரத்துவங்குகின்றன.

உயிரொளிர் (bioluminescence) உயிரினங்கள் அதிக அளவில் கடலில் இருப்பதாக பலர் நம்பினாலும் கூட, நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களும் நள்ளிரவில் ஒளிரக்கூடும் என்பதற்கு இத்தகைய காளான்களும் மின்மினிப்பூச்சிகளும் ஒரு நல்ல உதாரணமாக இருந்து வருகிறது.

வகைப்படுத்தப்பட்ட 1,20,000 பூஞ்சை வகைகளில், 100 பூஞ்சை வகைகள் ஒளிரும் தன்மை கொண்டவை என்று மோங்காபேயின் செய்தி குறிப்பிடுகிறது. அதில் வெகு சிலவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒளிரும் காளான்கள் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இங்கே, புகைப்படத் தொகுப்பில் உங்களுக்காக!

கோவையின் ஆனைமலைக் காடுகள் உட்பட மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்த ஒளிரும் காளான்களை பலர் பார்த்துள்ளனர்.
பகலில் வெள்ளை நிறத்திலும், இரவில் உயிரொளியோடு பச்சை நிறத்திலும் இந்த காளான்கள் ஒளிர்வது ஏன்?  இந்த அரிய நிகழ்வுக்கு காரணமான அறிவியல் என்ன? ஆனைமலைக் காடுகள், ஒளிரும் காளான்கள்,
ஆனைமலைத் தொடரில்  பருவமழைக்கு முந்தைய காலங்களில் இந்த ஒளிரும் காளான்களை மரக்கட்டைகள், பாறை இடுக்குகள் போன்றவற்றில் உங்களால் காண இயலும்,  Bioluminescence mushrooms, ஆனைமலைக் காடுகள், ஒளிரும் காளான்கள்,
ஆனால் காடுகள்  ஆச்சர்யங்களை உள்ளடக்கியவை. சக ஆராய்ச்சியாளர்கள் சிலர் முன் பருவமழை காலம் மட்டுமின்றி பல காலகட்டங்களிலும் இத்தகைய காளான்களை பார்த்ததாகக் கூறுகின்றனர்,   Bioluminescence mushrooms, ஆனைமலைக் காடுகள், ஒளிரும் காளான்கள்,
ஓரிரு நாள் மழைக்குப் பிறகு இந்தக் காளான்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. பொதுவாகவே காளான்களின் ஆயுட்காலம் குறைவு என்பதால் சில வாரங்கள் மட்டுமே இந்த ஒளிரும் காளான்களைக் காண இயலும்,
இந்த காளான்களில் Luciferin என்ற, கந்தகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்த கலவை உள்ளது. காற்றில் உள்ள ஆக்ஸிஜன் இதில் பட்டதும் Luciferase நொதி செயல்பட்டு காளான்கள் ஒளிருகின்றன
ஈரப்பதமான, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் ஒளிரும் இந்த காளான்கள் பூச்சிகளை கவருகின்றன. இதன் மூலமாக இக்காளான்களின் விதைகள் காடு முழுவதும் பரவுகின்றன!
 ஐரோப்பா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் ஆசியாவில் உள்ள மிதமான மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் ஒளிரும் காளான்களைக் காண இயலும் ,
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கோவா போன்ற பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர், வடகிழக்கு மாநிலங்களில் காசி மற்றும் ஜெயந்தியா மலைத்தொடர்களில் ஒளிரும் காளான்கள் பார்க்கப்பட்டுள்ளது ,

தமிழகத்தில் இது போன்று ஒளிரும் காளான்கள் தோன்றுவது முதல்முறையல்ல. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டில் கன்னியாகுமரியின் சில பகுதிகளில் இத்தகைய ஒளிரும் காளான்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதன் பின்னாள் இருக்கும் பல சுவாரசிய மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் அப்போது பிபிசி தமிழ் செய்தியாக்கியிருந்தது. அது தொடர்பான முழுமையான செய்தியை நீங்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC