SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவின் பிரம்மாஸ்திரம் பிரம்மோஸ் – எப்படி உருவானது? என்னவெல்லாம் செய்ய முடியும்?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாகிஸ்தானில் இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாக இந்தியா கூறுகிறது. அப்பொழுதில் இருந்து பிரம்மோஸ் நிறைய விவாதங்கள் எழுந்தன.
பிரம்மோஸ், உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகும்.
இது தரையிலிருந்து குறைந்த உயரத்தில், மிக அதிக வேகத்தில் பாய்கிறது.
அதனால் தான் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் இதை இடைமறிப்பது எளிதல்ல. இந்த ஏவுகணைகளால் குறுகிய நேரத்தில் நீண்ட தூரத்திற்கு ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்.
ரேடார் மூலம் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளைக் கண்காணிப்பது எளிதானது அல்ல. ஏனென்றால் அவை நிலப்பரப்புக்கு மிக அருகில், மிகக் குறைந்த உயரத்தில் பறக்கின்றன.
பிரம்மோஸ் ஏவுகணைகளில் நான்கு வகைகள் உள்ளன.
இவற்றில் தரையிலிருந்து தரைக்கு (surface-to-surface), வானிலிருந்து தரைக்கு, கடலிலிருந்து தரைக்கு, நீருக்கடியில் இருந்து தரைக்கு ஆகிய ஏவுதல்கள் அடங்கும்.
ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட சூப்பர்சோனிக் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU