SOURCE :- INDIAN EXPRESS
Jan 11, 2025 00:39 IST
ஈரோடு கிழக்கு தொகுதி – தி.மு.க போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பாக தி.மு.க போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Jan 10, 2025 21:17 IST
கரும்பு விவசாயி சின்னம் கோரி நா.த.க விண்ணப்பம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி விண்ணப்பித்துள்ளது. உழவு செய்யும் விவசாயி மற்றும் புலி சின்னங்கள் மறுக்கப்பட்டதால், தற்போது கரும்பு விவசாயி சின்னம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Jan 10, 2025 20:36 IST
த.வெ.க தேர்தல் நெறிமுறைகள் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிர்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பதவிக் காலம் இருக்கும் என எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Jan 10, 2025 20:16 IST
அரசு விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Jan 10, 2025 20:04 IST
சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
Jan 10, 2025 19:51 IST
சென்னையில் டி20 – ஜன.12ல் டிக்கெட் விற்பனை
சென்னை சேப்பாக்கத்தில் ஜன.25ல் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டி20 போட்டிக்கு ஜன.12ல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது.
ஜனவரி 12ம் தேதி காலை 11 மணி முதல் இணையத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
Jan 10, 2025 19:07 IST
எந்த காலத்திலும் டங்ஸ்டன் சுரங்கம் வராது – அண்ணாமலை
எந்தக் காலத்திலும் டங்ஸ்டன் சுரங்கம் வராது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, டங்கஸ்டன் சுரங்கத்தின் அனுமதி ரத்து தொடர்பான அறிவிப்பை, விரைவில் சென்னைக்கு வருகை தர இருக்கும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வெளியிடுவார் எனவும் அண்ணமலை குறிப்பிட்டுள்ளார்.
Jan 10, 2025 18:57 IST
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
Jan 10, 2025 18:41 IST
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தாம்பரம் ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
Jan 10, 2025 18:32 IST
த.வெ.க மாவட்ட செயலாளர்கள் தேர்வு – விண்ணப்பம் விநியோகம்
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின் நிர்வாகிகளை அழைத்து ஒரு மனதாக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
Jan 10, 2025 18:14 IST
ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் – நடிகர் அஜித்
ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என 24H துபாய் ரேஸின்போது நடிகர் அஜித் பேட்டி அளித்துள்ளார்
Jan 10, 2025 17:52 IST
நான் கடவுள் அல்ல – மோடி
தவறுகள் நடைபெறுவது இயல்புதான். நானும் கூட தவறுகள் செய்வேன். நானும் மனிதன்தான் கடவுள் அல்ல என தொழிலதிபர் நிகில் காமத் உடனான பாட்காஸ்ட் பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
Jan 10, 2025 17:32 IST
சட்டப்பேரவையில் இ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் சவால்
நான் சொன்னது தவறு என்றால் நீங்கள் சொல்லும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் கூறுவதை நிரூபிக்கவில்லை என்றால் நான் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்களா? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்
Jan 10, 2025 17:15 IST
தமிழக அரசுக்கு கமல் பாராட்டு
துணைவேந்தர் நியமனம் சம்பந்தமான யு.ஜி.சி அறிவிப்புக்கு எதிரான தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்
Jan 10, 2025 17:00 IST
யார் அந்த சார் என கேட்டால் எதற்கு பயப்படுகிறீர்கள்? இ.பி.எஸ் – ஸ்டாலின் காரசார விவாதம்
சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி: “யார் அந்த சார் என் டான் கேட்கிறோம், அதற்கு ஏன் பயப்படுகிறீர்கள்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “திரும்பத் திரும்ப தவறான தகவலைப் பேசிக்கொண்டிருந்தால் பொள்ளாச்சி விவகாரத்தை பேச வேண்டியது வரும். எந்தக் காரணத்தைக்கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டோம். அது எங்களுக்கு தேவை இல்லை.
துரைமுருகன்: இந்த விவகாரத்தில் ஏதாவது ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் என ஒரு அமைச்சர் பேசுகிறார், இது நியாயமா?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் பெறப்பட்டு 12 நாட்களுக்கு பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்த 12 நாளில் நடந்தது என்ன? யார் அந்த சார் என பேட்ஜ் அணிந்து வந்தது மலிவான அரசியல்.
எடப்பாடி பழனிசாமி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என தான் கேட்கிறோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தினம் தினம் தவறான அறிக்கைகளை நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள், நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?
Jan 10, 2025 16:42 IST
அண்ணா பல்கலை. விவகாரம்; சட்டப்பேரவையில் ஸ்டாலின் – இ.பி.எஸ் விவாதம்
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இ.பி.எஸ் சட்டப்பேரவையில் விவாதம் மேற்கொண்டனர். யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து வந்ததை மலிவான அரசியல் என முதலமைச்சர் விமர்சித்துள்ளார் என சட்டப்பேரவையில் இ.பி.எஸ் கூறினார். தினம் தினம் தவறான அறிக்கைகளை நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள், நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? என முதல்வர் ஸ்டாலின் கூறினார்
Jan 10, 2025 15:55 IST
நிர்வாகிகள் பட்டியலை ஜன. 20-க்குள் வழங்க த.வெ.க மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஆனந்த் அறிவுறுத்தல்
ஜனவரி 20-ம் டேதேதிகுள் விரிவான பட்டியலை வழங்க த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். த.வெ.க உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனம் குறித்து, த.வெ.க மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆனந்த் அறிவுறுத்தியுள்லார். தலைமை நிர்வாகிகள் அறிவிப்புக்குப்பின் ஒன்றியம், வட்டம், பகுதி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் 2 துணைச் செயலாளர்கள், பொருளாளரை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Jan 10, 2025 15:44 IST
திருவள்ளுவர் தினம்: ஜனவரி 15-ல் சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – கலெக்டர் உத்தரவு
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Jan 10, 2025 15:41 IST
திருப்பதி கோயிலில் வி.ஐ.பி-களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும் – பவன் கல்யாண்
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். சாதாரண பக்தர்களைப் புறக்கணிக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது” என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மீது பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார்.
Jan 10, 2025 15:29 IST
பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீக்கம் – ஐகோர்ட் உத்தரவு
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல் தொழில்நுட்ப தொழில்முனைவோர் என்ற அமைப்பை துவங்கியதாக வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Jan 10, 2025 15:26 IST
முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரனை விடுவித்து வேலூர் கோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து – ஐகோர்ட்
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என வேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Jan 10, 2025 15:16 IST
மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
தாந்திர மின் கணக்கிடு குறித்த கேள்விக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும்” என்று கூறினார்.
Jan 10, 2025 15:08 IST
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி நிதி விடுவிப்பு – மத்திய அரசு
தமிழ்நாட்டுக்கான வரி பங்காக ரூ.7,057 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு கடந்த மாதம் ரூ.89,086 கோடி தரப்பட்ட நிலையில், இந்த மாதம் மாநிலங்களின் வரி பங்காக ரூ.1.73 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
Jan 10, 2025 14:48 IST
பாகுபாடு கூடாது – காவல்துறைக்கு அறிவுறுத்தல்
“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும்” என்று காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Jan 10, 2025 14:29 IST
தமிழ்நாட்டுக்கு ரூ. 7057 கோடி விடுவித்த மத்திய அரசு
2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வை மாநிலங்களுக்கு விடுவித்தது மத்திய அரசு. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 31,039 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பீகாருக்கு ரூ. 17,403 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 13,588 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.7057 கோடி கிடைத்துள்ளது.
Jan 10, 2025 14:22 IST
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி: தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை அமைச்சர் பெரியசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அ.திமு.க, பா.ம.க, உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் காங்கிரசின் விருப்பமாக உள்ளது. தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சியான காங்கிரஸ் கட்சியே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jan 10, 2025 14:11 IST
சட்டப்பேரவையில் ஸ்டாலின் – இ.பி.எஸ் கடும் விவாதம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதம் பின்வருமாறு:-
எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை.
முதலமைச்சர்: எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்
எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது
முதலமைச்சர்: எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.
எடப்பாடி பழனிசாமி: தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா?
சபாநாயகர்: இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லைவ் செய்ய முடியவில்லை. டி.டி அனுமதியின்றி உள்ளே வந்தபோதும் அவர்களை வெளியே அனுப்பினோம். இது குறித்து ஏற்கனவே விளக்கத்தை அளித்துள்ளேன்
எடப்பாடி பழனிசாமி: ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை. சபாநாயகர் தமிழில் வாசித்த உரையாகத்தான் கருத முடிகிறது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது.
எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள்.
முதலமைச்சர்: இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார். நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது.
எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்கள் இருந்த ஆட்சிதான்.
முதலமைச்சர்: தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை ஏற்கவில்லை. வரவும் விடவில்லை
எடப்பாடி பழனிசாமி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துபோய்விட்டது. நீங்கள் நூற்றாண்டு நாணயம் வெளியிடும்போது பா.ஜ.க அமைச்சரை அழைத்து வெளியிட்டீர்கள்
முதலமைச்சர்: ஒன்றிய அமைச்சராக உள்ளவரை அழைத்து வெளியிட்டோம். அதில் என்ன தவறு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்
முதலமைச்சர்: நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள்
அமைச்சர் துரை முருகன்: அவர்கள் (அதிமுகவினர்) வெளிநடப்பு செய்யப்போகிறார்கள். அதற்காக தயாராக வந்துள்ளனர்
எடப்பாடி பழனிசாமி: நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் கட்சி நிகழ்ச்சி
முதலமைச்சர்: அது கட்சி நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சிதான்.
இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.
Jan 10, 2025 14:10 IST
சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – மரண தண்டனை: ஸ்டாலின் மசோதா தாக்கல்
“18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என்றும் கூறி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்தார்.
Jan 10, 2025 13:52 IST
ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு – நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டம்
சென்னை அருகே நல்லூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை ஒட்டி, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வீட்டு வரி, குடிநீர் வரி பன்மடங்கு உயரும் அபாயம் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Jan 10, 2025 13:51 IST
பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: ஐகோர்ட் அதிரடி
பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களோடு ரூ.2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
Jan 10, 2025 12:55 IST
23 ஆண்டுகால வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு – சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் இடையே மோதலில் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் 2019ம் ஆண்டு போலீசார், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுவித்து நீதிபதி உத்தரவு.
Jan 10, 2025 12:45 IST
பொங்கல் கொண்டாட்டம் – 7 முன்பதிவு மையங்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதலாக 7 முன்பதிவு மையங்கள் திறப்பு. பொங்கல் கொண்டாட சொந்தஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு. பேருந்து நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே தானியங்கி பயணச்சீட்டு இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்திவைப்பு.
Jan 10, 2025 12:17 IST
காட்டுப்பன்றியை சுட வனத்துறைக்கு அனுமதி
காப்புக்காடுகளில் இருந்து 1 – 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி. விலை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட விவசாயிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை. வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து சட்ட பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் பொன்முடி பேச்சு.
Jan 10, 2025 12:08 IST
மாவட்ட செயலாளர்களை தனித்தனியே சந்திக்கும் விஜய்
தவெக மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல். 100 மாவட்ட செயலாளர்களை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க தவேக திட்டம். தேர்வானதும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச விஜய் திட்டம்.
Jan 10, 2025 12:05 IST
ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வரும் 500 புதிய மின் பேருந்துகள்
ஏப்ரல் மாதம் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்து அமைச்சர் தகவல்.
Jan 10, 2025 12:00 IST
விக்கிரவாண்டி மாணவி பலி – ஜாமீன்
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம். பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்க பள்ளியின் தாளாளர், முதல்வருக்கு உத்தரவு.
Jan 10, 2025 11:34 IST
குடியிருப்புக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் – உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்புக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளையும் இணைத்து விதிகளை வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பான குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் விவரங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக டிஜிபி தலைவராகவும் உறுப்பினர்களாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் இடம்பெறும் வகையில் குழுவை மாற்றி அமைத்து, உத்தரவிட்டுள்ளது. ஆறு வாரங்களுக்கும் இக்குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 20 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Jan 10, 2025 11:10 IST
பா.ஜ.க வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய பாஜக மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் முறையீடு. பா.ஜ.கவின் முறையீட்டை ஏற்க மறுத்தது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு.
Jan 10, 2025 11:02 IST
ஷூட்டிங்கில் விஜய் – மீட்டிங்கில் தவெக நிர்வாகிகள்!
சென்னை பனையூரில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. அவர் படப்பிடிப்பிற்ற்கு சென்ற நிலையில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
Jan 10, 2025 10:37 IST
14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை காலத்தை அதிகரிக்கும் வகையில் சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டப்பேரவையில் மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள், ஜாமினில் வெளி வராத வகையில் சட்டத்தில் திருத்தம், 14 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
Jan 10, 2025 10:31 IST
ஆளுநருக்கு எதிராக ரிட் மனு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
“ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. தமிழ்நாடு ஆளுநராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார்” -மனுவில் கூறப்பட்டுள்ளது.
Jan 10, 2025 10:28 IST
‘யார் அந்த சார்? Vs இவன்தான் அந்த சார்’
அதிமுகவினருக்கு பதிலடியாக திமுக எம்.எல்.ஏ.க்கள் ‘இவன்தான் அந்த சார்’ என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி படத்துடன் பதாகை ஏந்தி முழக்கமிட்டனர்.
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை பாதுகாத்து, தப்பிக்க முயற்சித்த அதிமுக பிரமுகர் சுதாகர் இடம்பெற்றுள்ள போஸ்டரை ஏந்தி முழக்கமிட்டனர்.
இந்த வழக்கில் சுதாகர் அண்மையில் கைது செய்யப்பட்டார். எனினும், திமுகவினர் இந்த போஸ்டரை அவைக்குள் அவர்கள் எடுத்துச்செல்லவில்லை.
Jan 10, 2025 09:34 IST
10,000 ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம்
சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளில், பயணிகளின் வசதிக்காக அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
Jan 10, 2025 08:38 IST
‘அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள்’ – அமைச்சர் துரைமுருகன்
“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை மறைக்க முடியாது. அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள். யாருக்கோ ஏஜெண்டாக இங்கே அரசியல் நடத்தும் தற்குறிகள் பெரியாரை உரசி பார்க்கின்றன என சீமான் மீது அமைச்சர் துரைமுருகன் மறைமுகமாக சாடியுள்ளார்.
Jan 10, 2025 07:49 IST
பொங்கல் பண்டிகை- இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு 14,014 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது
SOURCE : TAMIL INDIAN EXPRESS