SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 17, 2025 22:09 IST

    மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு!

    கடந்தாண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தியதை போல, இந்தாண்டு மலேசியாவிலும் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை உலகெங்கும் பரப்புவதில் கவனம் செலுத்துவோம் என இலங்கை முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

  • Jan 17, 2025 22:06 IST

    உக்ரைன் உடனான போர்: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் மரணம்!

    உக்ரைன் உடனான போரில், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 126 இந்தியர்களில், |16 பேர் காணாமல் போனதாகவும், 96 நாடு திரும்பியதாகவும், 18 பேர் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisment

    Advertisement

  • Jan 17, 2025 20:31 IST

    பாஜக தேர்தல் அறிககையில் இலவச திட்டங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

    பாஜக தேர்தல் அறிககையில், பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ள ஜெ.பி. நட்டா, இதற்காக பிரதமர் மோடியின் ஒப்புதலைப் பெற்றாரா? ஏனென்றால், இலவசங்களை வழங்கியதற்காக பிரதமர் மோடி பல முறை என்னை விமர்சித்துள்ளார். இலவசங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என தான் கூறியது தவறு என பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். இலவசங்கள் நாட்டு மக்களுக்கு நன்மையைத் தரும் என்பதை பிரதமர் மோடி இப்போதாவது ஏற்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.

  • Jan 17, 2025 20:26 IST

    விடுமுறை முடித்து சென்னை திரும்பும் மக்கள்: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!

    பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பியுள்ள நிலையில, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நின்று, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன..

    Jan 17, 2025 20:24 IST

    சித்தராமையாவுக்கு எதிரான எம்.யு.டி.ஏ வழக்கு: ரூ300 கோடி சொத்துக்கள் முடக்கம்!

    கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான எம்.யு.டி.ஏ (MUDA) முறைகேடு வழக்கில், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான ரு₹300 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) இருந்து, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கிக் கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Jan 17, 2025 19:43 IST

    Creta Electric மாடல் கார்களின் விலைப் பட்டியல் வெளியீடு

    Creta Electric மாடல் கார்களின் விலைப் பட்டியலை வெளியிட்டது ஹூண்டாய் நிறுவனம். 42kWh, 51.4kWh என 2 பேட்டரி வேரியன்டுகளில் அறிமுகமாகியுள்ள இவற்றின் ஆரம்ப விலை ரூ.17,99,000-ல் தொடங்கி ரூ.23,49,900 வரை நிர்ணயம்

    Jan 17, 2025 19:09 IST

    பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் 

    நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி  இருக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 31ம் தேதி முதல் பிப். 13ம் தேதி வரை நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Jan 17, 2025 19:07 IST

    பொங்கலுக்கு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்: தமிழ்நாடு அரசு

    பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

    Jan 17, 2025 18:29 IST

    சென்னையில் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு – சாதுர்யமாக செயல்பட்ட விமானி 

    சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.  விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 162 பேர் உயிர்தப்பினர்

    Jan 17, 2025 18:15 IST

    புதிய வீடியோவில் முகத்தை மூடிக்கொண்டு  சந்தேக நபர்

    மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது கட்டிடத்தில் நடிகர் சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் சந்தேக நபர் முகத்தை மூடிக்கொண்டு பையை எடுத்துக்கொண்டு மாடிக்கு செல்லும் புதிய வீடியோ இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

    போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர் அவரின் வீட்டிற்குள் ஊடுருவுவதற்கு முன்பு அதிகாலை 1.37 மணிக்கு படிக்கட்டுகளில் கவனமாக ஏறுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் முகத்தை மூடிக்கொண்டு பையை ஏந்தியிருந்தார்.

    வியாழன் அன்று வெளியான சிசிடிவி காட்சியில், தாக்குதல் நடத்தியவர், சிவப்பு துணி அணிந்து, முதுகுப்பையுடன், அதிகாலை 2.30 மணியளவில் நடிகர் வசிக்கும் சத்குரு ஷரன் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தார். முதல் காட்சியில் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Jan 17, 2025 18:05 IST

    உரிய ஆவணங்கள் இல்லை –  திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது

    திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் கடந்த 15 நாட்களில் வங்கதேசத்தை சேர்ந்த 46 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

    Jan 17, 2025 17:29 IST

    புதிய டாடா சியரா ICE 

    டாடா மோட்டார்ஸ் வரிசையில் வரலாற்று சிறப்புமிக்க மாடலான டாடா சியரா, புதிய பரிமாணமாக ICE மற்றும் EV வடிவில் வெளியாக உள்ளன. இவை டெல்லி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று 12.3 inch திரைகள், Harman ஒலி அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களுடன் களமிறங்க உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.10.50 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Jan 17, 2025 17:18 IST

    “ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்” – நடிகர் அஜித்குமார்

    “கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்; வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை ரொம்ப ரொம்ப குறுகியது அழகாக வாழ பாருங்கள். உங்களுக்கு ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்காதீர்கள்” – நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். 

    Jan 17, 2025 16:33 IST

    திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் போலி டிக்கெட்டுகள் கொடுத்து மோசடி: 3 பேர் கைது

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் போலி டிக்கெட்டுகளை கொடுத்து மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிக்கெட் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமிபதி என்பவருடன் கூட்டு சேர்ந்து ரூ.300 தரிசன டிக்கெட்டை போட்டோஷாப் மூலம் தயாரித்து, அதிக தொகைக்கு விற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் 5 பேர் ஈடுபட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். 11 போலி டிக்கெட்டுகளை 19 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர்களிடம் விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Jan 17, 2025 16:09 IST

    தி.மு.க ஆட்சி மீது எனக்கு கோபம் உள்ளது – செல்வப்பெருந்தகை

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “இந்த ஆட்சி மீது எனக்கு கோபம் உள்ளது; பொங்களுக்கு ரூ. 1,000 தராதது பற்றி துரைமுருகன் அப்படி கூறியிருக்கக் கூடாது. ஈரோட்டில் தி.மு.க போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளது. தி.மு.க கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்பேன்” என்று கூறினார்.

    Jan 17, 2025 16:03 IST

    சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய ஸ்டாலின், உதயநிதிக்கு நடிகர் அஜித் பாராட்டு

    சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் அஜித் பாராட்டதெரிவித்துள்ளார்.  அண்மையில், துபாயில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு 3வது இடத்தைப் பிடித்தது. 

    Jan 17, 2025 15:28 IST

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை உயிரிழப்பு: தந்தை மனுவில் ஐகோர்ட் உத்தரவு

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், விசாரணையை சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை பழனிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு, காவல் துறை சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    Jan 17, 2025 14:44 IST

    சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு..வெளியான முக்கிய அறிவிப்பு

    பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 19ஆம் தேதி மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, கும்பக்கோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இந்த ரயில் செல்கிறது.

    Jan 17, 2025 14:32 IST

    பரந்தூர் செல்லும் விஜய் – ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் ஆனந்த்

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்தித்து பேச உள்ளார் த.வெ.க தலைவர் விஜய். ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே மக்களை விஜய் சந்திக்க தேர்வான இடத்தை நேரில் ஆய்வு செய்தார் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

    Jan 17, 2025 14:30 IST

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்தித்து பேச உள்ள த.வெ.க தலைவர் விஜய்

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து பேச உள்ளார். ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே மக்களை விஜய் சந்திக்க தேர்வான இடத்தை த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார் 

    Jan 17, 2025 14:10 IST

    சென்னை திரும்பும் மக்கள் பயண திட்டங்களை மாற்ற வேண்டும் – போக்குவரத்துத்துறை

    பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவதற்கான பயண திட்டங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. வரும் 19ஆம் தேதி ஒரே நேரத்தில் சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வரும் 19ஆம் தேதிக்கு பதிலாக இன்றும், நாளையும் தங்களின் பயண திட்டத்தை மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Jan 17, 2025 13:48 IST

    எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்துக்கு நடிகர் விஷால் மலர் தூவி மரியாதை

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு நடிகர் விஷால் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    Jan 17, 2025 13:25 IST

    பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சுமதிக்கு அர்ஜூனா விருது

    பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சுமதிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அர்ஜூனா விருது வழங்கினார். நித்யஸ்ரீ சுமதி பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார் 

    Jan 17, 2025 13:17 IST

    தடை செய்யப்பட்ட பொருட்கள் – ஐகோர்ட் கேள்வி

    தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் போன்ற பொருட்கள் எப்படி சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Jan 17, 2025 12:39 IST

    குகேஷுக்கு கேல் ரத்னா விருது

    உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கேல் ரத்னா விருதை வழங்கினார். மேலும், அவருக்கு ரூ. 25 லட்சத்திற்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    Jan 17, 2025 12:21 IST

    பொங்கல் தொகுப்புடன் ரூ. 2000 வழங்கி உத்தரவிட மறுப்பு

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2000 வழங்கி உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    Jan 17, 2025 12:04 IST

    சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது?

    மும்பையில் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் அவர் மீது கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்ததாகவும், அவரை பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

    Jan 17, 2025 11:26 IST

    ஆர்.என். ரவிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

    துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், கூடுதல் மனுவாக இது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான இறுதி விசாரணை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

    Jan 17, 2025 10:47 IST

    டோல்கேட்டில் மாதாந்திர பாஸ்

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க தனி நபர் வாகனங்களுக்கு மாதாந்திர அல்லது ஆண்டு பாஸ் வழங்குவதற்கு மத்திய அரசு ஆலோசனை அளித்துள்ளது. வாகனம் புறப்படும் இடத்தில் இருந்து சென்றடையும் இடம் வரைக்குமான கட்டணத்தை மட்டும் வசூலிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். 

    Jan 17, 2025 10:43 IST

    சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

    சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு. நில அபகரிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வருவதாக காவல்துறை நீதிமன்றத்தில் வாதம்.

    Jan 17, 2025 10:41 IST

    சிறப்பு ரயில் இயக்கம்

    பொங்கல் பண்டிகை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக (ஜன.19) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  மண்டபம் – சென்னை எழும்பூர் (06048) தூத்துக்குடி – தாம்பரம் (06168) மதுரை – சென்னை எழும்பூர் EMU (06062) ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    Jan 17, 2025 09:46 IST

    “பாதுகாப்பு இல்லாத நகரம் மும்பை”

    மும்பையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். நடிகர் சயீஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விழுந்ததை சுட்டிக்காட்டி மகராஷ்டிரா அரசு குறித்து விமர்சித்துள்ளார்.

    Jan 17, 2025 09:26 IST

    டெல்லியில் 300 யூனிட் இலவச மின்சாரம்

    காங்கிரஸ் வாக்குறுதி டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    Jan 17, 2025 09:25 IST

    சிறார் ஆபாச வீடியோ – மேலும் இருவர் கைது

    சென்னை மயிலாப்பூரில் சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்ற விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Jan 17, 2025 09:21 IST

    ரூ.1 கோடி கேட்டு கத்திக்குத்து

    பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ரூ.1 கோடி கேட்டு மிரட்டி கத்தியால் குத்தியதாக நடிகர் வீட்டில் பணிபுரியும் செவிலியர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

    Jan 17, 2025 09:19 IST

    “ஏழைகளின் தோழன் எம்ஜிஆர்” – கமல்ஹாசன்

    “ஏழைகளின் தோழனாகவும் எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி. ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கூறினார்.

    Jan 17, 2025 08:55 IST

    ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி அளித்துள்ளனர். விபத்து குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    Jan 17, 2025 08:48 IST

    அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களுக்கு கனமழை

    தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 18 ஆம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Jan 17, 2025 08:44 IST

    போக்குவரத்து கண்காட்சி இன்று திறப்பு!

    டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இன்று முதல் ஜனவரி 22 வரை 3 வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து கண்காட்சி நடைபெறுகிறது.

    Jan 17, 2025 08:21 IST

    கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி

    சென்னை முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Jan 17, 2025 08:17 IST

    நம்ப முடியாத அளவுக்கு சவாலாக இருக்கிறது – கரீனா கபூர்

    சைஃப் அலிகான் மீதான தாக்குதல் சம்பவம், நம்ப முடியாத அளவுக்கு சவாலாக இருக்கிறது சைஃப் அலிகானின் மனைவி கரீனா கபூர் வேதனை தெரிவித்துள்ளார்.

    Jan 17, 2025 08:16 IST

    நோயாளிகளை நலம் விசாரித்த ராகுல் காந்தி

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்தார்.

    Jan 17, 2025 08:13 IST

    சித்தூர் அருகே விபத்து – 4 பேர் பலி

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே டிப்பர் லாரி மீது பேருந்து மோதி விபத்து. 4 பேர் பேர் பலி திருப்பதி சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து. திருச்சியைச் சேர்ந்த 4 பேர் பலி, 25 பேர் காயம் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர் சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது சுற்றுலா வேன் மோதி பயங்கர விபத்து

    Jan 17, 2025 07:51 IST

    கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகள்

    உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும் உள்ளிட்ட 7 விதிமுறைகளை பிசிசிஐ விதித்தது.

    Jan 17, 2025 07:46 IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தி.மு.க. மற்றும் நா. த.க இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர். அடுத்த மாதம் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    Jan 17, 2025 07:40 IST

    “2026 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம்”

    2026 சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    Jan 17, 2025 07:36 IST

    மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்

    இன்பநிதி நண்பர்களுக்காக தன்னை எழ சொன்னதாக பரவிய செய்தி வதந்தி என்றும் அமைச்சர் எழுந்து நின்றதால் தாமும் நின்றதாக மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS