SOURCE :- INDIAN EXPRESS
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று ரூ.10 காசுகள் குறைந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
மழை நிலவரம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 5.1 செ.மீ., சென்னை மீனம்பாக்கத்தில் 4.2 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 3.2 செ.மீ., மழை பதிவு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
-
Jan 19, 2025 07:56 IST
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் காலம் நீட்டிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளர்.
Jan 19, 2025 07:54 IST
சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது
மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சைஃப் அலிகான் இல்லத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசர்வடவலியில் பதுங்கியிருந்தவரை காவல்துறை கைது செய்தது,
போலீசாரிடம் பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் குற்றவாளி தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கூறியதாக தகவல். தானேவில் உள்ள பாரில் பணியாற்றி வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைய என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெறுகிறது.
SOURCE : TAMIL INDIAN EXPRESS