SOURCE :- INDIAN EXPRESS

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

சிறப்பு பேருந்து: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 2,17,000 பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 6.40 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Jan 13, 2025 07:46 IST

    10 மணி வரை எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • Jan 13, 2025 07:43 IST

    புதுச்சேரி சிறுமிக்கு HMPV தொற்று

    புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியானது. காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    Advertisment

    Advertisement

  • Jan 13, 2025 07:40 IST

    விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

    சென்னையில் போகி புகை, பனிமூட்டம் காரணமாக 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களில் மாற்றம். டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Jan 13, 2025 07:39 IST

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – போக்குவரத்து மாற்றம்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல் வழியாக செல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    Jan 13, 2025 07:37 IST

    போகி பண்டிகை கொண்டாட்டம்

    சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

SOURCE : TAMIL INDIAN EXPRESS