SOURCE :- INDIAN EXPRESS

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் சந்திரகுமார், 2011-2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

  • Jan 11, 2025 08:17 IST

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது!

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  • Jan 11, 2025 07:38 IST

    கார் பந்தய மைதானத்தில் அஜித் பேட்டி

    “முழுவீச்சில் ரேஸில் ஈடுபடுவேன். ரேஸில் ஈடுபட வேண்டாம் என என்னை யாரும் சொல்வதில்லை. ரேஸிங் சீஸனான அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை நான் எந்தப் படங்களிலும் கமிட் ஆவதில்லை. அந்த நேரத்தில் நான் முழுவீச்சில் ரேஸில் ஈடுபடுவேன்” என அஜீத் பேட்டி அளித்துள்ளார்.

    Advertisment

    Advertisement

  • Jan 11, 2025 07:37 IST

    டி 20 டிக்கெட் விற்பனை

    சென்னை சேப்பாக்கத்தில் ஜன.25ல் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டி20 போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை. நாளை காலை 11 மணி முதல் இணையத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

  • Jan 11, 2025 07:35 IST

    மிக வெப்பமான ஆண்டு

    வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதில் மிக வெப்பமான ஆண்டு 2024 ஆகும் என உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.

    Jan 11, 2025 07:34 IST

    இந்தி மொழி சர்ச்சை

    ஆம், இந்தி நமது தேசிய மொழி அல்ல; அது ஒரு இணைப்பு மொழி; நமது வசதிக்கேற்ப பயன்படுத்தப்படும் மொழி என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

    Jan 11, 2025 07:33 IST

    களைகட்டிய ஆடுகள் விற்பனை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ₹3 கோடிக்கு விற்பனையாகின.

    Jan 11, 2025 07:32 IST

    மாநில கட்சி அந்தஸ்து

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்து, பானை சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS