SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 11, 2025 21:43 IST

    நீட் குறித்து திருமாவளவன் விளக்கம்

    நீட் தேர்வு ரத்துக்கு மத்திய அரசு தான் முட்டுக்கட்டையாக இருப்பதாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வு ரத்து தொடர்பாக மாநில அரசை விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

  • Jan 11, 2025 20:54 IST

    “தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்”: ஸ்டாலின்

    சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், மக்கள் பணியாற்ற தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

    Advertisment

    Advertisement

  • Jan 11, 2025 20:11 IST

    பரந்தூர் செல்ல விஜய் திட்டம்

    புதிதாக விமான நிலையம் கட்டப்படும் திட்டத்தை எதிர்த்து பரந்தூரில் போராடி வரும் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக காவல்துறைக்கு விஜய் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

  • Jan 11, 2025 19:47 IST

    சொந்த ஊர் புறப்படும் மக்கள்: கிளாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    பொங்கல் விடுமுறைக்காக இன்றே சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 

    Jan 11, 2025 19:11 IST

    ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒரு போதும் கூறவில்லை: எஸ்.எஸ்.சிவசங்கர்

    மதுரை – தூத்துக்குடி தமிழக ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒரு போதும் கூறவில்லை. மத்திய ரயில்வே அமைச்சருக்கு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வலியுறுத்தல்

    Jan 11, 2025 18:58 IST

    பொங்கலையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

    பொங்கல் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதி, மதம் இல்லாத விழா பொங்கல் விழா. பொங்கலையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது, தமிழ் சாதி மட்டும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    Jan 11, 2025 18:01 IST

    பொங்கல் பண்டிகை விடுமுறை: சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பலர்  படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் நிலையில், ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை கூடுதலாக இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Jan 11, 2025 17:14 IST

    மகளிர் உரிமைத்தொகைக்காக தி.மு.க அரசு கடன் வாங்குகிறது: எடப்பாடி பழனிச்சாமி

    பல வங்கிகளில் கடன் வாங்கியே மாதா மாதம் மகளிர் உரிமைத்தொகை ரூ1000 கொடுக்கிறார்கள். ரூ1000 உதவித்தொகை கொடுப்பதாக தி.மு.க நாடகம் போடுகிறது. யாராக இருந்தாலும் இந்த தொகையை கடன்வாங்கி கொடுக்க முடியும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    Jan 11, 2025 17:06 IST

    துபாய் 24H சீரிஸ் ரேஸ்: அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என அறிவிப்பு!

    அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணியில் மட்டும் RACER-ஆக அஜித்குமார் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது விலகியுள்ளார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Jan 11, 2025 16:52 IST

    ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 தொழிலாளிகள் பலி

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஓய்வு வேண்டும் என பிசிசிஐ – இடம் கேட்டு இருந்தார். அதனால் அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்படும் எனவும், அவர் நேரடியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்ற 2 தொழிலாளிகள் அம்பத்தூர் அருகே ரயிலில் இருந்து விழுந்து பலியானார்கள். ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குனு (20), உமேஷ் (19) பலியாகினர்.

    Jan 11, 2025 16:40 IST

    ‘குற்றவாளியை காப்பாற்ற தி.மு.க அரசு முயற்சி’ – இ.பி.எஸ் திட்ட வட்டம்

    “பெரியார் குறித்த சீமானின் பேச்சை ஏற்க முடியாது’. மறைந்த தலைவர் குறித்து அவதூறாக பேசுவதை ஏற்று கொள்ள முடியாது, அது சரியானதல்ல. பெரியாரால் கிடைத்த நன்மைகள் ஏராளம், அதை எல்லாம் மறந்துவிட்டு சீமான் இப்படி பேசியிருக்க கூடாது. 

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளை அ.தி.மு.க காப்பாற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Jan 11, 2025 15:54 IST

    சென்னையில் விமான சேவை நேரத்தில் மாற்றம்

    பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகள், டயர் போன்றவற்றை தெருக்களில் எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படும். மேலும் பனியின் தாக்கமும் காணப்படும். அதனால் பிளாஸ்டிக் கழிவுகள், டயர்களை எரிக்க வேண்டாம் என அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், சென்னை விமான நிலைய மற்றும் பல்வேறு ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 13ம் தேதி அதிகாலை மற்றும் காலைநேர விமானங்களின் வருகை, புறப்பாடு சேவைகளின் நேரத்தை மாற்றியமைத்துள்ளனர்.

    இதன்படி, மஸ்கட்டிலிருந்து வரும் ஓமன் ஏர்வேஸ் விமானம், துபாயிலிருந்து வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் இருந்து வரும் ஏர்ஏசியா விமானம் அதிகாலை சென்னைக்கு வராமல், தாமதமாக வந்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், லங்கன் ஏர்லைன்ஸ் போன்றவை போகி தினத்தில் தங்களின் பயண நேரத்தை மாற்றியமைக்க ஆலோசித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணிகளுக்கும் முறையாக குறுந்தகவல் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ உள்பட பல்வேறு உள்நாட்டு விமானங்களும் போகி பண்டிகையன்று ஏற்படும் கடும் பனி மற்றம் புகைமூட்டத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க, அதிகாலை மற்றும் காலைநேர விமானசேவை நேரங்களை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான பயணிகளுக்கு முறையாக குறுந்தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தெருக்களில் தீயிட்டு எரிக்க வேண்டாம்’ என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    Jan 11, 2025 15:49 IST

    ‘சீமான் பேசியதை ஏற்க முடியாது’ – எடப்பாடி பழனிசாமி பதில்

    பெரியார் குறித்து சீமான் பேசியதை ஏற்க முடியாது என்று செய்தியாளரின் கேள்விக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.  

    Jan 11, 2025 15:46 IST

    ஜனவரியிலேயே ரிலீஸ் ஆகிறதா விடாமுயற்சி?

    தனது ஒரு படம் ஜனவரியிலும் இன்னொரு படம் ஏப்ரல் அல்லது மே மாதத்திலும் ரிலீஸ் ஆக இருப்பதாக கார் ரேஸ் களத்தில் இருந்து நடிகர் அஜித் தகவல் தெரிவித்துள்ளார். பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாத விடாமுயற்சி ஜனவரி கடைசியில் வெளியாக வாய்ப்பா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

    Jan 11, 2025 15:38 IST

    நடிப்பு, கார் ரேஸ்  – இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்: அஜித் பேட்டி  

    “நடிப்பு, கார் ரேஸ்  இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டிலுமே உடலளவிலும் மனதளவிலும் அதிகம் உழைத்தாக வேண்டும். எனக்கு பல வேலைகளை  செய்வது பிடிக்காது. எனவே ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த நினைக்கிறேன்” -ரேஸிங் டிராக்கில் இருந்து நடிகர் அஜித் கூறினார். 

    Jan 11, 2025 15:01 IST

    டிரம்ப் விடுவிப்பு

    ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறை தண்டனையோ, அபராதமோ செலுத்த தேவையில்லையென அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    Jan 11, 2025 14:27 IST

    72 மணிநேரம் தான் கெடு – மெடாவுக்கு பிரேசில் உத்தரவு 

    “தகவல்களின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக 72 நேரத்தில் விளக்கம் வேண்டும்” என்று மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசு காலக்கெடு விதித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களை மெட்டா நிறுவனம் இயக்கி வருகிறது. 

    Jan 11, 2025 14:20 IST

    “சீமானுக்கு பாடம் புகட்ட வேண்டும்” – வைகோ 

    பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

    தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.

    சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

    பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

    தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    Jan 11, 2025 14:17 IST

    5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

    தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பொங்கல் தினத்தன்று தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Jan 11, 2025 13:47 IST

    தமிழக பா.ஜ.க புதிய தலைவர் யார்?

    தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வரும் 17ஆம் தேதி சென்னை வருகிறார்.  தலைவர் பெயர்ப் பட்டியலில் அண்ணாமலை, வானதி மற்றும்  நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

    Jan 11, 2025 13:43 IST

    குழந்தை மரணத்தில் சந்தேகம் உள்ளது – தாய்

    சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிதி எங்களுக்கு வேண்டாம், நீதி தான் வேண்டும். குழந்தை செப்டிக் டேங்கில் விழவில்லை, மரணத்தில் சந்தேகம் உள்ளது. முதலில் எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?. செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தையின் மேல் பிளீச்சிங் பவுடர் வாசனை எப்படி வரும்?. சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு செய்வோம் என  விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த  குழந்தையின் தாய் கூறினார். 

    Jan 11, 2025 12:02 IST

    நீட் தேர்வு விவகாரம் – தி.மு.க அரசை சாடிய விஜய்

    கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?  என்று தி.மு.க அரசை த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். 

    Jan 11, 2025 11:55 IST

    ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் – பேரவையில் மசோதா நிறைவேற்றம்  

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கும் சட்ட   மசோதா நிறைவேற்றப்பட்டடது. அதிமுக, பாமக கட்சிகளின் எதிர்ப்பை மீறி பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

    Jan 11, 2025 11:52 IST

    நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது – ஸ்டாலின்

    டங்ஸ்டன் விவகாரத்தில், மக்களை குழப்பி எதிர்க்கட்சிகள் குளிர்காய வேண்டாம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். 

    பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் சொன்னதில் தான் உண்மை உள்ளது.பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் அதிமுக சார்பில் ஆவணங்கள் வழங்கப்பட்டன

    சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    இரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு. சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முழக்கமிட்டனர். 

    இருவரும் இதோடு முடித்துக் கொள்ளுங்கள் எனக்கூறியதால் முடித்துக் கொள்கிறேன் எனக் கூறினார். 

    Jan 11, 2025 11:48 IST

    மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேற்றம்

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

    மசோதா ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது

    18 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை. டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.

    Jan 11, 2025 11:05 IST

    7 தனி சிறப்பு நீதிமன்றம்

    பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூர் சேலம் திருச்சி சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

    Jan 11, 2025 10:42 IST

    கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்;இப்படியாவது கருப்பு சட்டை அணிகிறார்களே – ஸ்டாலின்

    அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது; இப்படியாவது கருப்பு சட்டை அணிகிறார்கள் என நினைத்தேன் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

    Jan 11, 2025 10:35 IST

    சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

     “பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    Jan 11, 2025 10:34 IST

    விடியல் எங்கே? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதில்

    விடியல் எங்கே இன்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். “விடியலைப் பார்த்தால் அவர்களது கண்கள் கூசத்தான் செய்யும்” என்று எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

    Jan 11, 2025 10:32 IST

    சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

    “ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ. 4,142 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், ஆனால் ₹732 கோடி தான் வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு தனது திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால் மாநில அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை அளிக்க முடியாத நிலை உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    Jan 11, 2025 10:28 IST

    பீஞ்சல் புயல் பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்கவில்லை

    “பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையால் முடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் ஒன்றிய அரசு விடுவித்தது” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    Jan 11, 2025 10:26 IST

    அதிமுகவின் கருப்பு சட்டை விவகாரம்

    “அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது. பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன். ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்கு கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Jan 11, 2025 10:23 IST

    சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

    “ரவுடிகளின் மீது தயவு தாச்சனம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவில் பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினை காதல் விவகாரம் பணம் கொடுக்கல் வாங்கல் நிலப்பிரச்சினை தனிப்பட்ட முன்விரோதம் வாய் தகராறு போன்ற காரணங்களுக்காக நடந்துள்ளது. அரசியல் காரணங்கள் சாதிய , மதக் கொலைகள் முலையிலேயே கிள்ளி, குறைக்கப்பட்டுள்ளது” எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    Jan 11, 2025 10:21 IST

    ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

    “தமிழ்நாடு வளர்ந்துவருவதை அவரால் ஜீரனிக்க முடியவில்லை என நினைக்கிறேன். சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததின் மூலமாக அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை ஆளுநர் செய்துவருவது, இந்த பேரவை இதுவரை காணாத ஒன்று.. இனியும் காணக் கூடாது!” 

    Jan 11, 2025 10:20 IST

    எதிர்க்கட்சிகள் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை

    “விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். விடியல் தரப்போகிறோம் என சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலை பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்” என்றார்.

    Jan 11, 2025 10:19 IST

    பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றம்

    தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்ததில் பலவற்றை இதுவரை நிறைவேற்றியுள்ளோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Jan 11, 2025 10:06 IST

    சென்னையில் 3 மாணவர்கள் கைது

    சென்னையில் பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் பேரணியாக சென்றதால் போலீசார் நடவடிக்கை பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது திருவள்ளூரை சேர்ந்த புவியரசன், ஜீவா, பவித்ரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைந்தனர் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் பேருந்து மீது ஏறி ரகளை செய்தது தொடர்பாக, 30 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    Jan 11, 2025 10:05 IST

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்

     “திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் ஆளுநர் ரவி குறியாக உள்ளார். 2022-ல், இப்போது இருக்கும் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசித்தார், எதையும் மாற்றவில்லை. ஆனால் இந்த 3 ஆண்டு காலமாக அபத்தமான காரணங்களை கூறி உரை படிப்பதை தவிர்த்தார் என அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    Jan 11, 2025 10:04 IST

    சட்டப்பேரவை கூட்டம்

    “தமிழகத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்”  என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

    Jan 11, 2025 09:27 IST

    சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவை, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Jan 11, 2025 09:07 IST

    மேயர் பிரியா பேட்டி

    சென்னை மாநகராட்சி உட்பட்ட  புழுதிவாக்கம் பகுதியில் சமத்துவ பொங்கல் வைத்து விளையாட்டுப் போட்டிகளில் மேயர் பிரியா கலந்துகொண்டார். போகிப் பண்டிகையின்போது டயர் மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.

    Jan 11, 2025 09:02 IST

    விருதுநகர் அகழாய்வில் வளையல்கள் கண்டெடுப்பு!

    விருதுநகர் விஜயகரிசல்குளத்தில் நடக்கும் 3 ஆம் கட்ட அகழாய்வில் வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. சங்கு வலையல்கள், பெரிய கண்ணாடி மணி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    Jan 11, 2025 08:23 IST

    போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நற்செய்தி

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ. 85 ஊக்கத்தொகையாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Jan 11, 2025 08:19 IST

    “முதலமைச்சருக்கு நன்றி” – வி.சி.சந்திரகுமார்

    ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளராக அறிவித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் வி.சி.சந்திரகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்; அரசின் நலத்திட்டங்கள் இடைத்தேர்தலில் வெற்றியை தேடித் தரும் என்றும் கூறினார்.

    Jan 11, 2025 08:17 IST

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது!

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    Jan 11, 2025 07:38 IST

    கார் பந்தய மைதானத்தில் அஜித் பேட்டி

    “முழுவீச்சில் ரேஸில் ஈடுபடுவேன். ரேஸில் ஈடுபட வேண்டாம் என என்னை யாரும் சொல்வதில்லை. ரேஸிங் சீஸனான அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை நான் எந்தப் படங்களிலும் கமிட் ஆவதில்லை. அந்த நேரத்தில் நான் முழுவீச்சில் ரேஸில் ஈடுபடுவேன்” என அஜீத் பேட்டி அளித்துள்ளார்.

    Jan 11, 2025 07:37 IST

    டி 20 டிக்கெட் விற்பனை

    சென்னை சேப்பாக்கத்தில் ஜன.25ல் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டி20 போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை. நாளை காலை 11 மணி முதல் இணையத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    Jan 11, 2025 07:35 IST

    மிக வெப்பமான ஆண்டு

    வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதில் மிக வெப்பமான ஆண்டு 2024 ஆகும் என உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.

    Jan 11, 2025 07:34 IST

    இந்தி மொழி சர்ச்சை

    ஆம், இந்தி நமது தேசிய மொழி அல்ல; அது ஒரு இணைப்பு மொழி; நமது வசதிக்கேற்ப பயன்படுத்தப்படும் மொழி என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

    Jan 11, 2025 07:33 IST

    களைகட்டிய ஆடுகள் விற்பனை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ₹3 கோடிக்கு விற்பனையாகின.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS