SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 22, 2025 21:53 IST

    சீமானுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

  • Jan 22, 2025 20:37 IST

    மகாராஷ்டிராவில் ரயில் மோதி விபத்து – அமித்ஷா இரங்கல்

    மகாராஷ்டிரா, ஜல்கானில் ரயில் மோதி 8 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    Advertisment

    Advertisement

  • Jan 22, 2025 20:11 IST

    பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு; சிகிச்சை பலனின்றி இளைஞர் பலி 

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், படுகாயங்களுடன் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தமிழரசன் உயிரிழந்தார்.

  • Jan 22, 2025 20:06 IST

    குடியரசு தினவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சென்னை  போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு கூட்டம்

    குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை  காவல் ஆணையர்  தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

    விடுதிகளில் தங்குபவர்கள், சந்தேக நபர்கள் தணிக்கை, ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சந்தேக வாகனங்கள், உயர் பாதுகாப்பிற்குரிய இடங்கள், கட்டிடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்து பணி செய்து பாதுகாப்பை பலப்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை காவல் பிரிவு போலீசார் மூலம் Anti Sabotage Check வெடிபொருள் கண்டறிதல், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    Jan 22, 2025 20:00 IST

    சிவகங்கை மாணவிகளின் கோரிக்கையை சில மணி நேரங்களில் நிறைவேற்றிய ஸ்டாலின்

    கள ஆய்வுக்காகச் சிவகங்கை வந்த முதலமைச்சரிடம், இங்கு இரண்டு கல்லூரிகள் செயல்படும் நிலையில், பேருந்து நிறுத்தம் இல்லை என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். சிவகங்கை மாணவிகளின் பேருந்து நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை சில மணி நேரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். 

    Jan 22, 2025 19:05 IST

    மகாராஷ்டிரா ரயில் விபத்து – 11 பேர் பலி 

    மகாராஷ்டிராவில் புஷ்பக் ரயில் பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  புஷ்பக் ரயிலில் `ஃபயர் அலாரம்’ அடித்ததால், ரயில் பெட்டியில் இருந்து பயணிகள் வெளியேறிய போது எதிர்திசையில் வந்த ரயில் மோதியுள்ளது. ஒரு ரயிலில் இருந்து இறங்கியவர்கள் மீது மற்றொரு ரயில் மோதி கோர விபத்து  நிகழ்ந்துள்ளது. 

    Jan 22, 2025 19:02 IST

    முடிவுக்கு வந்த ஜெர்சி விவகாரம் 

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியுடன் விளையாட இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    Jan 22, 2025 18:33 IST

    மகாராஷ்டிராவில் ரயில் விபத்து – 8 பேர் பலி

    மகாராஷ்டிராவில் புஷ்பக் ரயில் பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புஷ்பக் ரயிலில் `ஃபயர் அலாரம்’ அடித்ததால், ரயில் பெட்டியில் இருந்து பயணிகள் வெளியேறிய போது எதிர்திசையில் வந்த ரயில் மோதியுள்ளது. 

    Jan 22, 2025 18:31 IST

    வீர தீர சூரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

    அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “வீர தீர சூரன்“ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    Jan 22, 2025 18:11 IST

    நயன்தாரா திருமண ஆவணப்படம் – ஒத்தி வைத்த ஐகோர்ட் 

    நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட் பிலிக்ஸ் நிறுவனத்தின் மனுவை  தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 

    “நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர் முடியும். காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று நெட் பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் வாதிட்டப்பட்டது. 

    அப்போது, “படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னை வீனஸ் காலனியில் தான் அலுவலகம் இருந்தது எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். படத்தின் அத்தனை காட்சிகளும் தனக்கு சொந்தமானவை” என்று தனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது. 

    Jan 22, 2025 18:08 IST

    ‘பா.ம.கவை விட வளர்ந்துவிட்டேன்’ –  வேல்முருகன் பேச்சு

    “பா.ம.க-வை விட வளர்ந்துவிட்டேன்.. இப்போது பொதுத் தலைவராக இருக்கிறேன். மீண்டும் ஏன் என்னை பழைய இடத்திற்கே கொண்டு செல்கிறீர்கள்..?” என்று விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார். 

    Jan 22, 2025 18:08 IST

    உன்னாவ் வழக்கு-இடைக்கால ஜாமின்

    உத்தர பிரதேசம் மாநிலம்  உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி குல்தீப் சிங் செங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    Jan 22, 2025 17:40 IST

    ஸ்மிருதி மந்தனா சாதனை 

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் 2ம் இடம் பிடித்து டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. 

    Jan 22, 2025 17:33 IST

    நாளை முக்கிய அறிவிப்பு – ஸ்டாலின் தகவல் 

    தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும்  நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது.  அனைவரும் வருக.” என்று பதிவிட்டுள்ளார். 

    இதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!” என்று கூறியுள்ளார். 

    Jan 22, 2025 17:29 IST

    பிரபாகரனுடன் சீமான் – புகைப்படம் எடிட்டிங்  விவகாரம்

    “ஆதாரம் இருக்கா..? 15 வருடமா இருக்கு.. அப்போ எங்க போனாரு. நேருக்கு நேர் வந்து நான்தான் ஒட்டி(எடிட்) கொடுத்தேன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம்” என்று சீமான் கூறியுள்ளார். 

    Jan 22, 2025 16:38 IST

    “இ.பி.எஸ் மீதான வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரிக்கலாம்”: நீதிமன்றம்

    வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அளிக்கப்பட்ட புகாரை, போலீசார் தொடர்ந்து விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையை நடத்த சேலம் நீதிமன்றம் விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

    Jan 22, 2025 16:14 IST

    ஆளுநருக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை

    ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Jan 22, 2025 16:08 IST

    பிடிவாரண்ட் – காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி

    நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை காவல்துறை முறையாக அமல்படுத்துவது இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், நீதிமன்றங்களால் எப்படி விசாரணையை முடிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    Jan 22, 2025 15:47 IST

    பெரியாரை அதிகமாக விமர்சித்தது தி.மு.க தான் – சீமான்

    தன்னை விட பெரியாரை அதிகமாக விமர்சித்தவர்கள் தி.மு.க-வினர் தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வீட்டை முற்றுகையிடுவது தான் திராவிடர் மரபு எனக் கூறிய அவர், தன் வீட்டை முற்றுகையிட வந்தவர்கள், சலூனைத்தான் முற்றுகையிட்டனர் என்று கூறியுள்ளார்.

    Jan 22, 2025 15:33 IST

    தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான் –  திருமுருகன் காந்தி

    தமிழ்நாட்டின் சாவர்க்கர் தான் சீமான் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார். சீமானின் பித்தலாட்டத்தை தெரிந்து கொண்டு நா.த.க-வில் இருக்கும் தொண்டர்கள் வெளியே வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Jan 22, 2025 15:21 IST

    தேசிய சுகாதார திட்டம் – 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

    தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது, அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Jan 22, 2025 15:14 IST

    பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை

    தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் குழு விதிகளின் 6-வது அல்லது 7-வது சம்பள கமிஷன் நிர்ணயித்த ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Jan 22, 2025 14:34 IST

    புஷ்பா 2 இயக்குநர் வீட்டில் ரெய்டு – ஐ.டி அதிகாரிகள் அதிரடி

    புஷ்பா 2 பட தயாரிப்பாளரை தொடர்ந்து, இயக்குநர் சுகுமாரின் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

    Jan 22, 2025 14:12 IST

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு பிரத்யேக செயலி அறிமுகம்!

    சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திற்கென  பிரத்யேக செயலி வெளியிடப்பட்டுள்ளது. பேருந்து அட்டவணை, அன்பகுள்ள வசதிகள், கால் டாக்சி புக்கிங், உதவி எங்கள் ஆகிய விவரக்ங்கள் அந்த செயலியில் அடங்கியிருக்கும். ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் இந்த செயலி வெளியிடப்படும். 

    Jan 22, 2025 14:08 IST

    திருத்தணி மலைக்கோயிலுக்கு இலவச பேருந்து

    திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக இலவச பேருந்து சேவையை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ. வேலு, நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

    Jan 22, 2025 13:52 IST

    திருவண்ணாமலையில் பாறைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது

    திருவண்ணாமலையில் கடந்த மாதம் தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 7 பேர் வீட்டில் புதைந்து உயிரிழந்த நிலையில், அங்கு சரிந்துள்ள பாறைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இப்பகுதியில் ஆபத்தான இடங்களில் வசிப்போர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டா இன்றி இங்கு வசிப்போருரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டுள்ளது.

    Jan 22, 2025 13:26 IST

    சீமான் இல்லத்தில் பிரியாணியை தொடர்ந்து பாட்டு கச்சேரி

    சீமான் இல்லத்தில் பிரியாணியை தொடர்ந்து பாட்டு கச்சேரி நடக்கிறது. முற்றுகையிட முயன்றவர்கள் கைதான நிலையில், பாட்டு கச்சேரி நடக்கிறது என்று தகவல். மைக்கில் பாடல்கள் பாடி நாதக தொண்டர்கள் உற்சாகம் ரசித்து வருகின்றனர். ஒருபக்கம் சுடச்சுட தயாராகும் பிரியாணி – மறுபக்கம் பாட்டு கச்சேரி என்று மகனுடன் சேர்ந்து சீமானின் மனைவியின் ரசித்துக்கொண்டிருக்கிறார். 

    Jan 22, 2025 13:14 IST

    பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும்” -அன்புமணி ராமதாஸ்

    பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் இப்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் இதையும் மெட்ரோ மூலம் எளிதாக இணைக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

    Jan 22, 2025 12:47 IST

    வேலியே பயிரை மேய்வதா? – உயர் நீதிமன்றம் கண்டனம்

    வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

    தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். 

    வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருப்பதால், விசாரணை நடத்த வேண்டி உள்ளது – காவல்துறை

    ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    Jan 22, 2025 12:20 IST

     சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மறுப்பு

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    2019ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதியப்பட்டது. 

    விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என சீமான் தரப்பு கோரிய நிலையில்  பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

    Jan 22, 2025 12:01 IST

    சீமான் இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

    பெரியார் குறித்த சீமானின் பேச்சை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் சீமான் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பிற்காக நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்நிலையில் போராட்டம் நடத்த முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

    Jan 22, 2025 11:13 IST

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர்

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகி உள்ளார். 

    வேலூரில் கடந்த 3ஆம் தேதி நடந்த சோதனை தொடர்பாக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். எம்.பி. கதிர் ஆனந்த் இடங்களில் 4 நாட்களுக்கும் மேலாக  அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. 
     காட்பாடியில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் ரொக்கப் பணம் மற்றும்  முக்கிய ஆணங்களை கைப்பற்றி சென்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. 

    Jan 22, 2025 10:56 IST

    அதற்குள் அலறினால் எப்படி? – சீமான்

    வள்ளுவரையும் வள்ளலாரையும் பாஜக அபகரிக்க நினைக்கிறது. திமுக அழிக்க நினைக்கிறது. அடிக்க இப்போதுதான் கை ஓங்கி இருக்கிறேன்; அதற்குள் அலறினால் எப்படி என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

    Jan 22, 2025 10:54 IST

    அமலாக்கத் துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர்

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.மு.க எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திஅய் அமலாக்கத்துறை சுமார் ரூ.14 கோடி பறிமுதல் செய்தது.

    Jan 22, 2025 10:28 IST

    சீமான் வீடு – புதிதாக வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு

    சென்னை நீலாங்கரையில் சீமான் இல்லம் முன்பு நாதகவினர் குவிந்துள்ள நிலையில், புதிதாக வருபவர்களுக்கு போலீசார் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

    Jan 22, 2025 10:27 IST

    ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டம்

    இந்தியா முழுவதும் அமலாகும் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    Jan 22, 2025 09:59 IST

    பெங்களூருவில் தமிழக பெண்ணுக்கு கூட்டு வன்கொடுமை

    பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை. மகளிர் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    Jan 22, 2025 09:58 IST

    பெரியாரா, பிரபாகரானா? – சீமான் ஆவேசம்

    பெரியார் சொன்னதை எடுத்துச் சொல்கிறோம் அதில் என்ன தவறு இருக்கிறது? பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அங்கு பதில் அளிக்கப்போகிறேன் என சீமான் பேட்டி அளித்துள்ளார்.

    Jan 22, 2025 09:20 IST

    பொறியாளருக்கு பாலியல் தொல்லை

    தாம்பரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பெண் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது தனியார் நிறுவன உரிமையாளர் ராஜாராமன் என்பவர் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தாம்பரம் போலீசாரால் கைது

    Jan 22, 2025 09:14 IST

    பெரியார் பேசியதற்கான ஆதாரம் எங்கே?

    வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

    Jan 22, 2025 09:12 IST

    சீமான் வீட்டின் முன் போலீசார் குவிப்பு

    சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தந்தை பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் காலை 10 மணி அளவில் அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

    Jan 22, 2025 08:40 IST

    சீமான் வீடு முற்றுகை.. பதற்ற நிலையில் நீலாங்கரை

    பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய நிலையில் பெரியார் உணர்வாளர்கள் முற்றுகை போராட்டம் இன்று அறிவித்தனனர். இந்நிலையில் நீலாங்கரையில் அவரது வீட்டின் இன்ற நா.த.கவினர் குவிந்துள்ளனர்.

    Jan 22, 2025 08:37 IST

    பாஜகவுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை

    “2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

    Jan 22, 2025 08:35 IST

    இன்று இந்தியா-இங்கிலாந்து முதல் டி20 போட்டி

    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

    Jan 22, 2025 08:10 IST

    முடிவை மாற்றுவார் ட்ர்ம்ப் – டெட்ராஸ் நம்பிக்கை

    உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா கைவிடும் என்றும் டிரம்ப் முடிவை மாற்றுவார் என்றும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Jan 22, 2025 08:08 IST

    நான் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது – ஆர்.எஸ். பாரதி

    நான் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது. சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை சீமான் பயன்படுத்த கூடாது என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி. கூறினார்.

    Jan 22, 2025 08:06 IST

    ஐபிஎஸ் பதவி உயர்வு-முதலமைச்சர் வாழ்த்து

    ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ள 25 பேருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தங்கள் பணி சிறக்கட்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Jan 22, 2025 08:01 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி மாற்றம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷை தேர்தல் ஆணையம் மாற்றியது. ஒசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நேற்று இரவே பதவி ஏற்றார். வேட்புமனு பரிசீலனையில் ஏற்பட்ட குழப்பத்தால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    Jan 22, 2025 07:58 IST

    மாட்டுகோமியம் – தமிழிசை பேட்டி

    மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க.ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? ஆயுர்வேதத்தில் இது அமிர்த நீர் என சொல்லப்படுகிறது. இதை சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 

    Jan 22, 2025 07:37 IST

    திருப்பதி அன்னதான பட்டியல்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதான உணவு பட்டியலில், வெங்காயம், பூண்டு இல்லாத வடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அன்னதானத்தில் அனைவருக்கும் வடை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளாது.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS