SOURCE :- INDIAN EXPRESS

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் சந்திரகுமார், 2011-2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

  • Jan 11, 2025 15:40 IST

    குமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

    கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுதால் மறு அறிவிப்பு வரும் வரை கண்ணாடி பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Jan 11, 2025 15:01 IST

    பாரத் பெட்ரோலியம் பைப் லைன் திட்டம் – மனு தள்ளுபடி

    கோவை இருகூர் – கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரி கோவை இருகூரைச் சேர்ந்த விவசாயி கணேசன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பைப் லைன் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. .

    Advertisment

    Advertisement

  • Jan 11, 2025 14:38 IST

    கார் மோதியதில் பைக் ஓட்டியவர் பலி – உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு 

    உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூலசமுத்திரம் ரவுண்டானா பகுதியில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னால், வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார் மீது மோதியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகிறார்கள்.  

  • Jan 11, 2025 13:47 IST

    மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது

    திருவள்ளூர்: பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது, 

    நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர் தப்பிய நிலையில், மோகன் என்ற மீனவர் உயிரிழக்க, செல்வம் என்பவர் மாயமானார், 

    Jan 11, 2025 13:16 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்

    மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    Jan 11, 2025 13:16 IST

    மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை

    கும்பகோணம் கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காததால் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    Jan 11, 2025 12:24 IST

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் 

    பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    Jan 11, 2025 10:07 IST

    லேசர் லைட் ஷோ

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொங்கல் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் லேசர் லைட் ஷோ நடைபெற்றது.

    Jan 11, 2025 09:46 IST

    விருதுநகர் அகழாய்வில் வளையல்கள் கண்டெடுப்பு! 

    விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடக்கும் 3-ம் கட்ட ஆகழ்வாய்வில் வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்கு வளையல்கள், பெரிய கண்ணாடி மணி உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

SOURCE : TAMIL INDIAN EXPRESS