SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 10, 2025 17:56 IST

    பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    பெரியார் குறித்து சீமான் கூறும் கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அண்ணா நகர் போலீசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

  • Jan 10, 2025 17:18 IST

    டங்ஸ்டன் போராட்டம்; வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் – ஸ்டாலின்

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

    Advertisment

  • Jan 10, 2025 16:23 IST

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

  • Jan 10, 2025 14:54 IST

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம் – அதிருப்தி நிர்வாகிகளுக்கு அழைப்பு

    த.வெ.க தூத்துக்குடி மாவட்ட  செயலாளர் தேர்வு தொடர்பாக சிக்கல் நீடித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு பாலா என்பவருக்கும் அஜித்தாவுக்கும் போட்டி என தகவல் வெளியாகிய நிலையில், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  மாவட்ட செயலாளர் தேர்வில் இருந்து அஜித்தா புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அஜித்தாவை மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் வரச் சொல்லியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    Advertisment

    Advertisement

  • Jan 10, 2025 14:38 IST

    பேட்டரி, சூரிய மின் தகடு தயாரிப்பு நிறுவனத்தில் இ.டி சோதனை – திருச்சியில் பரபரப்பு 

    திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள கல்லணை சாலையில் செயல்பட்டு வரும் பேட்டரி, சூரிய மின் தகடு உள்ளிட்டவை தயாரிக்கும் ஜாஸ்கான் எனர்ஜி என்கிற நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனால், திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Jan 10, 2025 13:54 IST

    ஈரோடு தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து மரணம்  

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக வந்திருந்த நெடுஞ்சாலை துறை அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைதுறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் சந்திரமோகன் தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் சந்திரமோகன் செல்ல முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

    மயங்கிய சந்திரமோகனை மீட்டு பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸார்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட சந்திரமோகன் மரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Jan 10, 2025 13:28 IST

    மதுரை ஆட்சியரின் கார் மீது பிரபல ரவுடி மகன் கார் மோதல்

    மதுரை ஆட்சியரின் கார் மீது பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மகனின் கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுத்தாவணி சிக்னல் அருகே திரும்பும் போது ஆட்சியர் கார் மீது ரவுடியின் மகன் மோதியுள்ளது. அப்போது ஆட்சியரின் ஓட்டுநர் – ரவுடி மகனின் ஓட்டுநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வம் மகன் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    Jan 10, 2025 13:01 IST

    இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை

    திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்துகிருஷ்ணன் என்பவர் அடித்துக்கொலை. தகராறில் முத்துகிருஷ்ணனை நெய்கிருஷ்ணன் என்பவர் அடித்து கொலை செய்ததால் பரபரப்பு. 

    Jan 10, 2025 11:30 IST

    வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஜன.17 வரை நடைபெறுகிறது. 

    Jan 10, 2025 11:08 IST

    சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு

    பெரியாரை அவமதித்ததாக தமிழ்நாடு முழுவது நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 60  வழக்குகள் பதிவு. 

    பெரியாரை சீமான் இழிவுபடுத்தியதாக பல்வேறு அரசியல் காட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை, நெல்லை, மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு. 

    Jan 10, 2025 10:33 IST

    வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு – முக்கிய அறிவிப்பு

    சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்கும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 11 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Jan 10, 2025 10:07 IST

    125 சவரன் நகை கொள்ளை

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  125 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை ஆலை ஊழியர்  வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் செல்வேந்திரன்  திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் திருவெண்காடு காவல்துறை ஆய்வு செய்து வருகிறார்கள். 

    Jan 10, 2025 09:51 IST

    சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு 

    பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சீமான் மீது தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS