SOURCE :- INDIAN EXPRESS
Jan 11, 2025 21:34 IST
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம் – சிவசங்கர் விளக்கம்
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடுமாறு கூறவில்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு கோரியதாக தெரிவித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Jan 11, 2025 21:07 IST
கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, உசிலம்பட்டியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Jan 11, 2025 18:32 IST
திருச்சி வேளான் கல்லூரியில் பொங்கல் விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண்மை தொழில் நுட்ப கல்லூரியில் இயற்கை உழவர்களின் பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 11-1-2025-ல் கலந்து கொண்டார். மேலும் இதில் இயற்கை வேளாண்மை செய்யும் உழவர், தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு செய்யும்
விழா கல்லூரியில் உள் அரங்கத்தில் நடை பெற்றது.
Jan 11, 2025 17:59 IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் சிறப்பு எஸ்.ஐ. கைது
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இடத்தில் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
Jan 11, 2025 17:08 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு
5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணித்தது அதிமுக
Jan 11, 2025 16:54 IST
சாலையை முறையாக அமைக்கக் கோரி வழக்கு – மதுரை ஐகோர்ட் உத்தரவு
பெரியதளை முதல் திசையன்விளை வரை சாலையை அகலப்படுத்தி முறையாக அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர், உதவி மண்டல பொறியாளர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
Jan 11, 2025 15:40 IST
குமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுதால் மறு அறிவிப்பு வரும் வரை கண்ணாடி பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Jan 11, 2025 15:01 IST
பாரத் பெட்ரோலியம் பைப் லைன் திட்டம் – மனு தள்ளுபடி
கோவை இருகூர் – கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரி கோவை இருகூரைச் சேர்ந்த விவசாயி கணேசன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பைப் லைன் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. .
Jan 11, 2025 14:38 IST
கார் மோதியதில் பைக் ஓட்டியவர் பலி – உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூலசமுத்திரம் ரவுண்டானா பகுதியில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னால், வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார் மீது மோதியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Jan 11, 2025 13:47 IST
மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது
திருவள்ளூர்: பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது,
நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர் தப்பிய நிலையில், மோகன் என்ற மீனவர் உயிரிழக்க, செல்வம் என்பவர் மாயமானார்,
Jan 11, 2025 13:16 IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
#Photos | மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்#SunNews | #Jallikattu2025 | #Alanganallur pic.twitter.com/BH6y8Vqhq9
— Sun News (@sunnewstamil) January 11, 2025
Jan 11, 2025 13:16 IST
மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை
கும்பகோணம் கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காததால் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Jan 11, 2025 12:24 IST
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Jan 11, 2025 10:07 IST
லேசர் லைட் ஷோ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொங்கல் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் லேசர் லைட் ஷோ நடைபெற்றது.
Jan 11, 2025 09:46 IST
விருதுநகர் அகழாய்வில் வளையல்கள் கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடக்கும் 3-ம் கட்ட ஆகழ்வாய்வில் வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்கு வளையல்கள், பெரிய கண்ணாடி மணி உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
SOURCE : TAMIL INDIAN EXPRESS