SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 18, 2025 19:30 IST

    நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும்: இளையராஜா எக்ஸ் பதிவு வைரல்

    “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Jan 18, 2025 18:58 IST

    அம்பேத்கர் படம் சேதம் – 3 பேர் கைது

    திருப்பத்தூர் மாவட்டம், நெக்குத்தி கிராமத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது, காவல் நிலையம் முன்பு பா.ம.க, வி.சி.க-வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisment

    Advertisement

  • Jan 18, 2025 17:14 IST

    குடிபோதையில் தகராறு – துணை நடிகர்கள் கைது

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த பாரதி ராஜா மற்றும் பாரத மணி ஆகிய துணை நடிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • Jan 18, 2025 17:05 IST

    விமரிசையாக கொண்டாடப்பட்ட ஆற்றுத் திருவிழா

    கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை பகுதியில் ஆற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை நிறைவடைந்து 5-ஆம் நாளில் இத்திருவிழா நடைபெற்றது.

    Jan 18, 2025 14:59 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்புமனு பரிசீலனை நிறைவு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்துள்ளது. 58 வேட்பாளர்கள், 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 3 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளது. 

    Jan 18, 2025 14:55 IST

    இஸ்லாமியர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி கிடாவுடன் மலை மீது உள்ள தர்காவிற்கு செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தர்காவில் வழிபாடு நடத்த மட்டுமே காவல்துறை அனுமதியுள்ளது.. மலையேற முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

    Jan 18, 2025 13:56 IST

    இட்லி கடை சூறை: பா.ஜ.க நிர்வாகிக்கு போலீஸ் வலை வீச்சு 

    விழுப்புரம் மணி நகரில் இட்லி கடையை சூறையாடியது, 2 முதியவர்களை தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரசாந்த் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்தது. 

    சரத்குமார் என்பவர் வீட்டில் கல்வீசித் தாக்கிவிட்டு, வழியில் சென்ற 2 முதியவர்களையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பா.ஜ.க நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்ட 2 பேரை போலீஸ் வலை வீசி தேடி  வருகின்றனர்.

    Jan 18, 2025 13:32 IST

    திருவண்ணாமலையில் பயங்கர தீ விபத்து

    திருவண்ணாமலையில் உள்ள ஏ.சி மெக்கானிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென பற்றி எரிந்த தீ – கடையில் இருந்த மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. அரை மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க  தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

    Jan 18, 2025 13:14 IST

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்… 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

    “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.  

    Jan 18, 2025 12:58 IST

    திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் வேட்பு மனு ஏற்பு

    வேட்புமனு பரிசீலனையில் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். தி.மு.க, நா.த.க வேட்பாளர்கள் உள்பட 4 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க, பா.ஜ.க., த.வெ.க ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. 

    Jan 18, 2025 12:45 IST

    கரூர்: போக்சோ வழக்கில் காவலர் கைது

    கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி அழித்த புகாரின் பெயரில் காவலர் இளவரசனை, கரூர் அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Jan 18, 2025 12:33 IST

    திருச்செந்தூரில் எம்.பி கனிமொழி ஆய்வு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி கனிமொழி ஆய்வு செய்கின்றனர். 

    Jan 18, 2025 11:55 IST

    நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்பு மனு ஏற்பு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதுவரை 3 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்.  

    Jan 18, 2025 11:39 IST

    அரசு ஊழியர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள்

    அரசு ஊழியர்கள், தங்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதையை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் நண்பனை அமர வைப்பதற்காக, ஆட்சியரை எழுப்பக் கூடிய அலங்கோலமான ஆட்சி நடைபெறுகிறது என்று விமர்சித்தார். இது மன்னராட்சிதான் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    Jan 18, 2025 11:24 IST

    ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் என புகார்

    கோவையிலிருந்து சென்னைக்கு வர அதிகபட்சமாக ரூ.1900 கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார். அதிக கட்டணம் குறித்து பிகார் கூற 1800 425 6151 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

    Jan 18, 2025 10:14 IST

    தியாகராஜருக்கு இசை அஞ்சலி

    திருவையாறு தஞ்சாவூரில் காவிரி கரையில் 1000 கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரே ராகத்தில் கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

    Jan 18, 2025 10:13 IST

    உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம் சகோதரர் பேட்டி

    தயவுசெஞ்சு யாரும் வண்டியில போகும்போது வேகமா போகாதீங்க என்று ஈரோடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ராகுல் டிக்கியின் சகோதரர் கிஷோர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

    Jan 18, 2025 09:57 IST

    மதுரை, திருச்சி டைடல் பூங்கா – சுற்றுச்சூழல் அனுமதி 

    மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை தரமணி, பட்டாபிராம், கோவையை தொடர்ந்து மதுரை, திருச்சியிலும் அமைக்கிறது

    டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி திருச்சியில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே  ரூ.289 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. 2 டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில், டைடல் பூங்கா பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது

    SOURCE : TAMIL INDIAN EXPRESS