SOURCE :- INDIAN EXPRESS
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (19-01-2025) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 55 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jan 19, 2025 10:14 IST
இந்த தேர்தலை ஒரு வாய்ப்பு – அமைச்சர் முத்துசாமி
“தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதை விட மக்களுக்கு உள்ள பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்கச் சொல்லி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாகக் கருதி தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகின்றோம்..” என ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்தார்.
Jan 19, 2025 09:35 IST
ஈரோடு கிழக்கு- நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பு மனுக்கனை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS