SOURCE :- INDIAN EXPRESS
Jan 12, 2025 17:57 IST
மின் கம்பியில் சிக்கிய தேர்
சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது, மின் கம்பியில் தேர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மரக்கட்டையை கொண்டு மின் கம்பியில் சிக்கிய அலங்கார துணி அகற்றப்பட்டது.
Jan 12, 2025 17:23 IST
கோயில் யானையின் உடல் அடக்கம்
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
Jan 12, 2025 16:27 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பா.ஜ.க புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடவில்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க, தே.மு.தி.க-வை தொடர்ந்து பா.ஜ.க-வும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
Jan 12, 2025 16:21 IST
அமைச்சர் பிரச்சாரம் ரத்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, அமைச்சர் முத்துசாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அனுமதி கிடைக்காததால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
Jan 12, 2025 14:56 IST
சகோதரியை காதலித்த கல்லூரி மாணவனை கொலை செய்த 17 வயது சிறுவன்
சிவகாசி அருகே சகோதரியை காதலித்த கல்லூரி மாணவனை 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த கல்லூரி மாணவரான வீர மாணிக்கம்(18), 14 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் சகோதரரான 17 வயது சிறுவன், வீரமாணிக்கத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 17 வயது சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Jan 12, 2025 13:50 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான பணிகளான வாடிவாசல், பார்வையாளர் மாடம் ,தடுப்பு போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
Jan 12, 2025 13:49 IST
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Jan 12, 2025 13:21 IST
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மோதிய சரக்கு வாகனம்; காவலர்கள் காயம்
திண்டுக்கல்லில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சரக்கு வாகனம் மோதியதில் போலீசாரின் 3 இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. காவலர்களும் காயம் அடைந்தது. போலீசார் மீது சரக்கு வாகனம் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Jan 12, 2025 13:19 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வரும் 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வரும் 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு வாக்கு சேகரிக்கும் பணி தொடங்குவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
Jan 12, 2025 13:18 IST
ஈரோட்டில் இ.பி.எஸ் உறவினர் ராமலிங்கம் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி உறவினர் ராமலிங்கம் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 5 நாட்களுக்கு பின் நேற்றிரவு நிறைவு பெற்றது
Jan 12, 2025 13:17 IST
திருப்பூரில் போலி ஆதார் கார்டை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த 31 வங்கதேச இளைஞர்கள் கைது
திருப்பூரில் போலி ஆதார் கார்டை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 31 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில், போலியான ஆதார் கார்டு கொடுத்து தனியார் பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அருள்புரத்தில் 28 பேர், வீரபாண்டியில் 2 பேர், நல்லூரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Jan 12, 2025 12:59 IST
திருச்செந்தூர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கடலில் புனித நீராடி முருகனை தரிசித்து வருகின்றனர்
Jan 12, 2025 12:37 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கலன்று நா.த.க வேட்பாளர் அறிவிப்பு – சீமான்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறித்து பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
Jan 12, 2025 12:30 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு – தமீமுன் அன்சாரி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கிறது. நாட்டின் நலனில் இந்த வெற்றி அமைந்திருப்பதால், தி.மு.க வேட்பாளர் வெற்றிக்கு முழுமையாக களப்பணியாற்றுவோம் என திருச்சியில் ம.ஜ.க தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்
Jan 12, 2025 11:46 IST
பல்லடம்: வங்கதேச நாட்டினர் 31 பேர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் தீவிரவாத தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேச நாட்டினர் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆதார் கொடுத்து பணியாற்றி வந்த வங்கதேச நாட்டினர் 28 பேர் வீரபாண்டி பகுதியில் இருவர் நல்லூர் பகுதியில் ஒருவர் என மொத்தம் 31 வங்கதேச நாட்டிஅன்ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Jan 12, 2025 11:07 IST
ஆருத்ரா தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
Jan 12, 2025 10:41 IST
கே.வி.பள்ளிகளில் தேர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்
பொங்கலன்று கேந்திர வித்யாலயாவில் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Jan 12, 2025 09:59 IST
சிறுவனுடன் நடனமாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்
திண்டிவனத்தில் தனியார் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சிறுவனுடன் நடனமாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்.
Jan 12, 2025 09:39 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
Jan 12, 2025 09:33 IST
ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.
Jan 12, 2025 09:33 IST
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. 56 வயதான கோயில் யானைக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Jan 12, 2025 09:30 IST
திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருஉத்திரகோசமங்கை மரகத நடராஜர் கோவிலில் சந்தன காப்பு அகற்றம் ஒரு ஆண்டு கழித்து சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை மரகத நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS