SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 17, 2025 22:04 IST

    நெல்லையில் இளையராஜா இசை நிகழ்ச்சி: திருநெல்வேலி – கன்னியாகுமரி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

    நெல்லை முத்தூர் பகுதியில் நடைபெறும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அதிகளவு வருகை தந்துள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்தபடியே வாகனங்கள் செல்கின்றன.

  • Jan 17, 2025 18:53 IST

    வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இராபத்து 8ஆம் நாள்

    ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவம் இன்று நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 

    Advertisment

    Advertisement

  • Jan 17, 2025 18:45 IST

    மதுரை ரயில் நிலையத்துடன் மெட்ரோ நிலையம் இணைப்பு – சாத்தியக் கூறு ஆய்வு 

    மதுரை ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு செய்யப்பட்டதாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்த மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும், மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • Jan 17, 2025 18:31 IST

    கோயில் திருவிழாவுக்கு கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

    கரூர் மாவட்டம் மாலைமேடு பகுதியில் உள்ள மாலையம்மன் கோயில் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கோயில் திருவிழாவுக்கு மாடுகள், பூஜை பொருட்களுடன் சென்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு சொந்தமான கோயிலில் ஒரு தரப்பினர் மட்டும் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்குப் போடப்பட்டுள்ளது.  ஒரு தரப்பினர் மட்டும் தனியாக திருவிழா நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.  

    Jan 17, 2025 17:32 IST

    ஈரோடு: சாலை விபத்தில் இன்ஸ்டா பிரபலம்பலி 

    ஈரோடு அருகே சாலை விபத்தில்  இன்ஸ்டா பிரபலம் ராகுல் பலியானார். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது மீடியனில் மோதி இறந்தார்..  

    Jan 17, 2025 17:20 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் –  65 பேர் வேட்புமனு தாக்கல் 

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

    Jan 17, 2025 15:54 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று (ஜனவரி 17) தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடைசி நாளான இன்று மட்டும் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    Jan 17, 2025 15:17 IST

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் புகைப்படம் வெளியீடு

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்.டி.ஐ மூலம் கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.

    Jan 17, 2025 14:47 IST

    காவலர் கண் முன்னே கொலை – உறவினர்கள் போராட்டம்.

    பெரம்பலூர் அருகே காவலர் கண் முன்னே இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.  கொலையாளியை உடனே கைது செய்யவேண்டும் என்பதற்க்காக இந்த போராட்டம் நடந்தது. 

    Jan 17, 2025 14:33 IST

    ஈரோடு கிழக்கு – நாதகவினர் மீது பாய்ந்த வழக்கு

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி வாக்கு சேகரித்ததாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் சாலையோரம் பதாகைகளை ஏந்தியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நிலை கண்காணிப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில் கட்சியின் மாவட்ட செயலாளர் நவநீதன் உட்பட 8 பேர் மீது தேர்தல் நடத்தை மீறியதாக இரு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Jan 17, 2025 13:40 IST

    திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு

    திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜனவரி 17) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    Jan 17, 2025 13:22 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். தனியொரு ஆளாக நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நா.த.க வேட்பாளர், மைக் சின்னம் ஒதுக்க வேண்டும் என எழுதி கொடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற வரும் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

    Jan 17, 2025 13:04 IST

    தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    Jan 17, 2025 11:33 IST

    ஸ்டாலின் கள ஆய்வு

    சிவகங்கை மாவட்டத்தில், ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    Jan 17, 2025 10:40 IST

    ஈரோடு கிழக்கில் போட்டியுமில்லை; ஆதரவுமில்லை – தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை; 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை தவெகவின் இலக்கு என த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

    Jan 17, 2025 10:04 IST

    திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு

    திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சித்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழப்பு, 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

    Jan 17, 2025 09:24 IST

    மேட்டூர் அணை நீர் அளவு சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 254 கன அடியில் இருந்து 151 அடியாக சரிந்துள்ளது.  டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், அணையின் நீர் இருப்பு 83.542 டிஎம்சியாக உள்ளது.

    Jan 17, 2025 09:23 IST

    மாடுபிடி வீரர் உருக்கம்…

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாருக்காக முதல் பரிசை வென்றேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரரான அபிசித்தர் கூறியுள்ளார்.

    Jan 17, 2025 09:06 IST

    அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS