SOURCE :- INDIAN EXPRESS

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றைய தினம் போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். பொங்கலை கொண்டாடும் விதமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.

  • Jan 13, 2025 09:56 IST

    ரூ.21 லட்சம் மோசடி – தம்பதி கைது

    கள்ளக்குறிச்சி, இருந்தை கிராமத்தில் பலர் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ.21 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவணைத் தொகை கட்டாததால் வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்ததை அடுத்து 25 நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட அண்ணாமலை சுகந்தி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Jan 13, 2025 09:16 IST

    திருச்செந்தூர் கடற்கரையில் கிடைக்கும் சிற்பங்கள்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடலில், சமீப காலமாக கடல் சீற்றம், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் இருந்து பல்வேறு விதமான வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்றன. இதனை தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Advertisment

  • Jan 13, 2025 09:15 IST

    நடராஜருக்கு சீர்வரிசையுடன் படையலிட்ட மீனவர்கள்

    சிதம்பரம் பருவதராஜா குல மீனவர் சங்கத்தினர் நடராஜரை மருமகனாக கருதி மேளதாளங்கள் முழங்க மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று தேரில் எழுந்தருளிய நடராஜருக்கு படையலிட்டனர். இதே போல மீனவர் குலத்தில் பிறந்த மகளாக கருதப்படும் சிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை எடுத்துச் சென்று கொடுத்து வழிபட்டனர். 

  • Jan 13, 2025 09:15 IST

    மது அருந்தினால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை

    அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுயில் காளை மாடுகள் உடன் வரும் இருவரும் மது அருந்தி விட்டு வந்தால் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    Advertisment

    Advertisement

  • Jan 13, 2025 09:13 IST

    நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

    நெல்லையப்பர் கோயில் தாமிர சபையில் நடராஜமூர்த்தியின் ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடனக் காட்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS