SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
நடப்பு தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
மறுபுறம் சென்னை அணி தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்து பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடனான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது. அணியின் பேட்டிங் லைன் அப் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவற்றில், பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அணியின் மிகப்பெரிய தோல்வியும், சென்னை ரசிகர்களை சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியை தோனி மீண்டும் தலைமையேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ருதுராஜ் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
களத்தில் விளையாடுவது யார்?
சென்னை அணியின் பிளேயிங் லெவன்
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
டெல்லி அணியின் பிளேயிங் லெவன்
ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் , சமீர் ரிஸ்வி, அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா,
மைதானத்தின் நிலை என்ன?
இன்றைய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக கருதப்படும் இந்த மைதானம் , இயல்புக்கு மாறாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்திருந்ததார்.
சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், தீபக் ஹூடா என யாரும் சிறப்பாக ஆடவில்லை.
சுழற்பந்திலும் பலம் வாய்ந்த டெல்லி அணி
அக்சர் படேல் தலைமையில் களம் காணும் டெல்லி அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உற்சாகமாக களமிறங்குகிறது. அணியில் ஃபாஃப் டூப்ளசிஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற அனுபவம் மிக்க வீரர்களையும் விப்ராஜ நிகம், அசுதோஷ் ஷர்மா போன்ற அதிரடியான இளம் வீரர்களையும் கொண்ட கலவையாக உள்ளது. இவர்கள் கடந்த போட்டிகளில் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதை மறக்க முடியாது. இன்றைய போட்டியில் டூப்ளசிஸ் களம் காணவில்லை.
சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டாலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் என சுழற்பந்து வரிசையையும் டெல்லி கொண்டுள்ளது.
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி அணி , சிஎஸ்கே-வை வென்றதில்லை. அப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹேமங் பதானி தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
-இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU