SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 16, 2025 11:50 IST

    போலீசாரிடம் பாம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம்

    தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வம் என்பவரை எரித்துக் கொன்றதாக, போலீசாரிடம் ரவுடி பாம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். 

    2018ஆம் ஆண்டு முதல் பன்னீர்செல்வம் காணாமல் போனதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

    தனது நண்பரான வழக்கறிஞர் ராஜேஷ் உடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை எரித்து கொலை செய்ததாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்தார். 

    எரித்துக் கொன்றதாக கூறப்படும் பன்னீர்செல்வம் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் பாம் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம், பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

  • Jan 16, 2025 11:15 IST

    ஸ்பேடெக்ஸ் திட்டம் – பிரதமர் மோடி வாழ்த்து

    விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு 
    இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும் கூறியுள்ளார்.   

    Advertisment

    Advertisement

  • Jan 16, 2025 11:03 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

  • Jan 16, 2025 10:44 IST

    உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள் – கமல்ஹாசன்

    நாட்டுப்புறத்தான் தன் காட்டுக்குச் செல்வதால் தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும் உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும் தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள். எனவே உழவரைப் போற்றுவதும் தாயைப் போற்றுவதும் வேறில்ல. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    Jan 16, 2025 10:40 IST

    பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. அமைச்சரவை முடிவுகள் குறித்த அறிவிப்பு மாலை 3 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    Jan 16, 2025 10:38 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் 2 காளைகள் அசத்தல் வெற்றி பெற்றது.

    Jan 16, 2025 10:05 IST

    முன்னாள் எம்பி., பி.ஆர்.சுந்தரம் காலமானார்

    ராசிபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல் நலக்குறைவால் காலமானார்.

    Jan 16, 2025 10:04 IST

    தங்க மோதிரம் வென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை தங்க மோதிரம் பரிசாக வென்றது.

    Jan 16, 2025 09:20 IST

    முதல் சுற்று நிறைவு

    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவு பெற்றது.

    Jan 16, 2025 09:09 IST

    ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் நிரந்தரமாக மூடல்!

    அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்க முதலீட்டு ராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். 

    Jan 16, 2025 09:06 IST

    வெற்றி பெற்ற சூரியின் காளை

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்பட்ட நடிகர் சூரியின் ராஜாக்கூர் கருப்பன் காளை வெற்றி பெற்றது.

    Jan 16, 2025 09:03 IST

    பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

    மும்பையில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து நடத்தப்பட்டது. மர்ம நபர் கத்தியால் குத்டியதில் காயமடைந்த சயிஃப் அலிகான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Jan 16, 2025 08:39 IST

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் – மகிழ்ச்சியில் பாலஸ்தீனிய மக்கள்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து காஸாவில் பாலஸ்தீனிய மக்கள் தஙக்ள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

    Jan 16, 2025 08:37 IST

    இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி என தகவல்

    விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி – இஸ்ரோ விஞ்ஞானிகள் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில் நுட்பத்தை அறிந்த 4வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது, இந்தியா ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக கடந்த டிச.30-ஆம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. ஜன.7ஆம் தேதி முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பின் ஜன.9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது ஜன.9ஆம் தேதியும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் டாக்கிங் செயல்முறையை 4வது முறையாக இன்று தொடங்கிய இஸ்ரோ அதில் வெற்றி கண்டு வரலாறு படைத்துள்ளதாக தகவல்.

    Jan 16, 2025 08:12 IST

    காணும் பொங்கலுக்கு கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கம்

    காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக மாமல்லபுரம், கோவளம், எம்.ஜி.எம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி குழந்தைகள் விளையாட்டு பூங்கா மற்றும் மெரினா கடற்கரை போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.
     

    Jan 16, 2025 07:56 IST

    காணும் பொங்கல் கொண்டாட்டம்

    இன்று காணும் பொங்கல் என்பதால் மின்சார ரயில்களில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  செங்கல்பட்டு – கடற்கரை, அரக்கோணம் – சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மின்சார ரயில் வழித்தடங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கிடங்களுக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.

    Jan 16, 2025 07:49 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    Jan 16, 2025 07:39 IST

    காணும் பொங்கல் – போலீசார் குவிப்பு

    காணும் பொங்கலையொட்டி சென்னையில் போலீசார் பாதுகாப்பு. காணும் பொங்கலையொட்டி, சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Jan 16, 2025 07:37 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்  3 வீரர்கள் தகுதி நீக்கம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் எடை குறைவு காரணமாக 3 வீரர்கள் வெளியேற்றப்பட்டன.

    Jan 16, 2025 07:36 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்ட சூரியோட செல்லமா பழகுற மாடு. அழைத்து வந்த  சதீஸ் பேட்டி அளித்துள்ளார். 

    Jan 16, 2025 07:34 IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், டிராக்டர், இருசக்கர வாகனம், ஆட்டோ, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படவுள்ளது.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS