SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“அடுத்த ஜென்மத்தில் நாம் நண்பர்களாக பயணிப்போம்” – கொலையாளியிடம் பேசிய கொல்லப்பட்டவரின் ஏ.ஐ.
22 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டவர் க்றிஸ் பெல்கே. அவருடைய ஏ.ஐ. பதிப்பானது, அவரை கொலை செய்த நபர் குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தது.
கொலை செய்த நபர் குறித்து, க்றிஸ் பெல்கேவின் குடும்ப உறுப்பினர்கள் எழுதிக் கொடுத்த வாக்குமூலம் ஒன்றை வாசித்தது அந்த ஏ.ஐ.
அதில், “நான் மன்னிப்பை நம்புகிறவன். மன்னிக்கும் கடவுளை நம்புகிறவன். மற்றொரு வாழ்வில் நீயும் நானும் நண்பர்களாக வாழ்வோம். இந்த தாக்குதல் நடந்த நாளில் நீயும் நானும் சந்தித்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஏ.ஐ. பயன்பாடு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான முழுமையான விவரம் இந்த வீடியோவில்!
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC