SOURCE :- BBC NEWS
செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சோதனை செய்யும் சென்னை ஐஐடி: சுனாமி பாதிப்புகளை தடுக்க உதவுமா?
12 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியக் கடற்கரையோரம் வாழும் மக்களின் வாழ்விலும், அங்கு அமைந்துள்ள முக்கிய துறைமுகங்களிலும், கடல் அலைகள் மற்றும் கடல் சீற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஒரு பிரத்யேக கட்டமைப்பைத் தொடங்கியுள்ளது ஐஐடி மெட்ராஸ் குழு.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை நம்மால் மறக்கவே முடியாது. சுனாமி, புயல் காலங்களில் ஏற்படும் கடல் சீற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இங்கு ஆய்வு செய்ய முடியும் என்கிறது ஐஐடி மெட்ராஸ்.
மத்திய அரசின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த ஆழமற்ற கடல் அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் ஆசியாவிலேயே மிகப்பெரியது எனக் கூறுகிறார், முதன்மை திட்ட விஞ்ஞானி ஸ்ரீகணேஷ்.
இங்கு பல்வேறு விதமான கடல் அலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், செயற்கை அலைகளின் சோதனைகள் மூலம் கிடைக்கும் தரவுகளை துறைமுகங்களின் பராமரிப்புக்கும், புதிய துறைமுகங்களின் கட்டமைப்புக்கும் பயன்படுத்துவது என்றாலும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார், ஐஐடி மெட்ராஸின் பெருங்கடல் பொறியியல் துறையின் பேராசிரியர் முரளி.
முழு விவரம் காணொளியில்.
தயாரிப்பு: சிராஜ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: எ. வில்பிரட் தாமஸ்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU