SOURCE :- INDIAN EXPRESS
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்தியா உட்பட பல அரசாங்கங்கள் ஆட்சியை இழந்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு பாட்காஸ்டில் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, மெட்டா அந்தக் கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டது, அதை “தற்செயலான தவறு” என்று குறிப்பிட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Inadvertent error’: Meta apologises for Zuckerberg’s election loss remark on Joe Rogan podcast
As the world’s largest democracy, India conducted the 2024 elections with over 640 million voters. People of India reaffirmed their trust in NDA led by PM @narendramodi Ji’s leadership.
Mr. Zuckerberg’s claim that most incumbent governments, including India in 2024 elections,…
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 13, 2025
மெட்டா இந்தியாவின் பொதுக் கொள்கை துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரால், சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் ஒரு பதிவின் மூலம் கூறினார்: “அன்புள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (@AshwiniVaishnaw), 2024 தேர்தல்களில் பல ஆட்சியில் இருணந் கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மார்க்கின் கருத்து பல நாடுகளுக்கு உண்மையாகவே உள்ளது. ஆனால், இந்தியாவிற்கு அல்ல. இந்த தற்செயலான தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மெட்டா நிறுவனத்துக்கு இந்தியா நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான நாடாக உள்ளது, மேலும், அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று கூறினார்.
Dear Honourable Minister @AshwiniVaishnaw , Mark’s observation that many incumbent parties were not re-elected in 2024 elections holds true for several countries, BUT not India. We would like to apologise for this inadvertent error. India remains an incredibly important country…
— Shivnath Thukral (@shivithukral) January 14, 2025
பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, ஜனவரி 20 முதல் 24 வரை மெட்டாவின் பிரதிநிதிகளை அழைத்து மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்கக் கோருவோம் என்று திங்கள்கிழமை கூறியிருந்தார்.
ஜோ ரோகன் பாட்காஸ்டில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க், 2024-ம் ஆண்டு உலகெங்கிலும் நடந்த தேர்தல்களில், இந்தியாவில் உள்ள அரசு உட்பட பெரும்பாலான தற்போதைய அரசாங்கங்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறியிருந்தார்.
“கோவிட்டைக் கையாள்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பணவீக்கம் ஏற்பட்டாலும் சரி, அரசாங்கங்கள் கோவிட்டை எவ்வாறு கையாண்டன என்பது போன்ற உலகளாவிய நிகழ்வுகள் உள்ளன. இது அமெரிக்காவை மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஆட்சியில் உள்ளவர்கள் மீதும், அனேகமாக, ஒட்டுமொத்தமாக இந்த ஜனநாயக நிறுவனங்களின் மீதும் நம்பிக்கையில் மிகவும் பரந்த சரிவைப் போன்ற உலகளாவிய விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS